Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஒஃபெலியா புயலின் தாக்கம் இன்று இரண்டாவது நாளாகவும் தொடர்கின்றது

In
Updated: 12:19 GMT, Oct 17, 2017 | Published: 11:15 GMT, Oct 17, 2017 |
0 Comments
1262
icon_com
This post was written by : S.K.Guna
Hurricane Ophelia 1

நேற்று திங்கள்கிழமை நாட்டின் மேற்கு கடற்கரைப் பகுதிகளைத் தாக்கிய ஒஃபெலியா புயல் அயர்லாந்து, வட அயர்லாந்து, ஸ்கொட்லாந்து, வடமேற்கு வேல்ஸ் பிராந்தியம், கம்றியா மற்றும் இங்கிலாந்தின் வடக்கு பகுதிகளில் கடுமையான பாதிப்புக்களை ஏற்படுத்தியது.

மணித்தியாலத்துக்கு 70KM வேகத்தில் வீசிய கடுமையான புயலினால் மூன்று பேர் உயிரிழந்தனர். பல பெருவீதிகளில் வாகனங்கள் தூக்கி வீசப்பட்டிருந்ததுடன் ரயில் போக்குவரத்துக்களும் பாதிக்கப்பட்டிருந்தன.

அயர்லாந்து, வட அயர்லாந்து மற்றும் பிரிட்டிஷ் தீவுகளில் ஒஃபெலியா புயலின் தாக்கம் அதிகமாக காணப்படுகின்றது. இப்பிராந்தியங்களில் இன்று இரண்டாவது நாளாகவும் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

அயர்லாந்தில் 245,000 க்கும் அதிகமான வீடுகள் மற்றும் வியாபார ஸ்தாபனங்கள், அலுவகங்களுக்கு மின்சாரம் தடைப்பட்டுள்ளது. வட அயர்லாந்தில் 3,800 வீடுகளுக்கும் வடக்கு வேல்ஸ்சில் 4,000 வீடுகளுக்கும் ஸ்கொட்லாந்தில் 1,100 வீடுகளுக்கும் மின்தடை ஏற்பட்டுள்ளது.

அயர்லாந்தில் 20,000 வீடுகளுக்கு தண்ணீர் இல்லாமையினால் அங்குள்ளவர்கள் பெரும் சிரமங்களுக்கு உள்ளாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் ஒஃபெலியா புயலின் தாக்கம் இன்று இரண்டாவது நாளாகவும் தொடர்வதனால் வாகனப்போக்குவரத்துக்கள் மற்றும் ரயில்போக்குவரத்துக்கள் பாதிக்கப்பட்டுள்ளன. அத்துடன் இங்கிலாந்தின் டோசெற் (Dorset ) மற்றும் தென்மேற்கு, வடமேற்கு பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
Hurricane Ophelia 6

Hurricane Ophelia 7

Ophelia-2

Ophelia-3

Ophelia-5

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg