Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஜனாதிபதியை சந்தித்தார் பாகிஸ்தான் வெளியுறவுச் செயலாளர்!

In இலங்கை
Updated: 14:25 GMT, Oct 17, 2017 | Published: 14:25 GMT, Oct 17, 2017 |
0 Comments
1264
This post was written by : Vithushagan

இரண்டு நாள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள பாகிஸ்தானின் வெளியுறவுச் செயலாளர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.

இன்று (செவ்வாய்க்கிழமை) இடம் பெற்ற குறித்த சந்திப்பில்  இரு நாடுகளுக்குமிடையிலான இருதரப்பு உறவுகள் தொடர்பாக கலந்துரையாடியுள்ளார்.

மேலும், பாகிஸ்தான் வெளியுறவு செயலாளர் இலங்கைக்கு பாகிஸ்தானில் மிக மகத்தான நன்மதிப்பு காணப்படுவதாகவும் அதனூடாக இரு நாடுகளினதும் இருதரப்பு உறவுகளை வலுப்படுத்த முடியும் என ஜனாதிபதியிடம் தெரிவித்துள்ளார்.

இலங்கை மற்றும் பாகிஸ்தானிற்கிடையிலான வர்த்தக உறவுகளை மேம்படுத்துவதற்கான ஆர்வத்தினை இதன் போது ஜனாதிபதியிடம் அவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg