Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பிரெக்சிற் பேச்சுவார்த்தையிலிருந்து விலகும் திட்டம் இல்லை – டேவிஸ்

In
Published: 07:50 GMT, Oct 18, 2017 |
0 Comments
1178
This post was written by : Suganthini
uk

பிரெக்சிற் விவகாரம் தொடர்பான பேச்சுவார்த்தையிலிருந்து தாம் விலகும் திட்டம் இல்லை என, பிரித்தானியாவின் பிரெக்சிற்றுக்கான அமைச்சர் டேவிட் டேவிஸ் தெரிவித்துள்ளார்.

பிரித்தானிய நாடாளுன்றத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற பிரெக்சிற் தொடர்பான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே, அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

இது அவர் மேலும் உரையாற்றியபோது, ‘பிரெக்சிற் விவகாரம் தொடர்பில்  ஐரோப்பிய ஒன்றியத்துடன் இந்த வாரம் நடைபெறும் பேச்சுவார்த்தையின்போது, சிறிதளவு முன்னேற்றம் ஏற்படுமென்று நாம் நம்புகின்றோம். எனவே, பிரெக்சிற் பேச்சுவார்த்தையிலிருந்து விலகும் திட்டம் எமக்கில்லை’ என்றார்.

நாடாளுமன்றத்தில் பிரெக்சிற் விவாதத்தில் கலந்துகொண்ட உறுப்பினர்கள் சிலர், ‘பிரெக்சிற் விவகாரம் தொடர்பில் இரு தரப்பினர்களும் உடன்பாடொன்றை எட்டாவிடின், பேச்சுவார்த்தை முடிவுக்கு வரலாமென்று தெரிவித்திருந்தனர். இதனையடுத்தே, பிரெக்சிற்றுக்குப் பொறுப்பான அமைச்சர் டேவிட் டேவிஸ் இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg