Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கடற்படையின் புதிய தளபதியாக ரியல் அட்மிரல் சிறிமேவன் ரணசிங்க நியமனம்

In இலங்கை
Published: 02:30 GMT, Oct 26, 2017 |
0 Comments
1280
This post was written by : Elakkiya

இலங்கை கடற்படையின் புதிய தளபதியாக ரியல் அட்மிரல் சிறிமேவன் ரணசிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.

குறுகியகால கடற்படைத் தளபதியாக பணியாற்றிய ரியல் அட்மிரல் டிரயஸ் சின்னையாவின் பதவிக்காலம் இன்றுடன் நிறைவடைகின்ற நிலையில் புதிய கடற்படைத் தளபதியாக ரியல் அட்மிரல் சிறிமேவன் ரணசிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்டுள்ள ரியல் அட்மிரல் சிறிமேவன் ரணசிங்கவின் பதவி நியமனக் கடிதத்தை ஜனாதிபதியின் செயலாளர் ஒஸ்டின் பெர்னாண்டோ நேற்று வழங்கியிருந்தார்.

முன்னர் கடற்படைத் தளபதியாக பணியாற்றிய ரியல் அட்மிரல் டிரயஸ் சின்னையா ஒருமாத காலத்திற்கு மாத்திரம் பொறுப்பேற்றிருந்த நிலையில் அவரது பதவிக்காலத்தை மேலும் ஒருமாதம் நீடிப்பதற்கு ஜனாதிபதி உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில்  இன்றுடன் அவருடைய பதவிக்காலம் நிறைவடைகின்ற நிலையில் இந்த புதிய நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

ரியல் அட்மிரல சிறிமேவன் ரணசிங்க இலங்கை கடலோர பாதுகாப்பு படையின் பணிப்பாளர் நாயகமாகவும் கடந்த காலங்களில் பணியாற்றியுள்ளார். அதுமட்டுமின்றி யுத்த காலப்பகுதியில் பல்வேறு கடற்படை சேவைகளையும் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg