Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கமால் குணரட்ணவின் கருத்துக்களால் சந்தேகம் ஏற்பட்டுள்ளது: தயாசிறி ஜயசேகர

In இலங்கை
Published: 02:49 GMT, Oct 26, 2017 |
0 Comments
1258
icon_com
This post was written by : Elakkiya

இராணுவ வீரர்களை காப்பாற்றுவதற்காக அரசாங்கம் முன்னிற்கின்ற போதிலும் முன்னாள் இராணுவ அதிகாரி கமால் குணரட்ண போன்றவர்களின் கருத்துக்கள் யுத்த நடைமுறை குறித்த சந்தேகங்களை தோற்றுவித்துள்ளதாக இணை அமைச்சரவை பேச்சாளரும் விளையாட்டுத்துறை அமைச்சருமான தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் நிருபர்களின் கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்படி தெரிவித்துள்ளார்.

இதன்போது, நாட்டை பிளவுபடுத்தும் முயற்சிக்கு ஆதரவு தெரிவிப்பவர்கள் தேசத் துரோகிகள் என்றும் அவர்களுக்கு 1987, 1989 ஆம் ஆண்டு காலப்பகுதியை போன்று மரணதண்டனை வழங்க வேண்டும் என்றும் முன்னாள் இராணுவ அதிகாரியான கமால் குணரட்ண தெரிவித்த கருத்து தொடர்பில் ஊடகவியலாளர்களால் கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு பதிலளித்த அமைச்சர் தயாசிறி ஜயசேகர, ‘” அரசியலமைப்பை ஆதரிப்பவர்களை கொல்ல வேண்டும் என்று முன்னாள் இராணுவ அதிகாரி கூறியிருக்கிறார். இவ்வாறு ஆவேசமாக பேசுகின்றவர்கள் எவ்வாறு யுத்தத்தை செய்திருப்பார்கள் என்ற சந்தேகம் ஏற்படுகின்றது.

இராணுவ வீரர்களை காப்பாற்ற வேண்டும் என்ற நிலைப்பாட்டில் நாங்கள் அவர்களுக்காக முன்னிற்கின்றோம். ஆனால் கமால் குணரட்ண கூறியிருக்கும் கருத்தை பார்க்கும்போது யுத்தம் எவ்வாறு நடத்தப்பட்டிருக்கும் என்ற சந்தேகம் ஏற்பட்டிருக்கின்றது. பொதுவான இடத்தில் இவ்வாறு பேசுபவர்கள் யுத்த களத்தில் என்ன செய்திருப்பார்கள் என்ற கேள்வி எழுகின்றது” என்று தெரிவித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg