Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பயங்கரவாதத்தை துாண்டுவோா் பொறுப்பு கூறவேண்டும்: டில்லர்சனிடம் சுஸ்மா வலியுறுத்தல்!

In இந்தியா
Updated: 04:23 GMT, Oct 26, 2017 | Published: 04:23 GMT, Oct 26, 2017 |
0 Comments
1364
This post was written by : Kemasiya

பயங்கரவாதத்தை தூண்டிவிடும் எந்தவொரு நாடும் அதற்கு பொறுப்பேற்க வேண்டும் என்று அமெரிக்க இராஜாங்க செயலாிடம் வலியுறுத்தியுள்ளதாக, அமைச்சர் சுஸ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க இராஜாங்க செயலா் ரெக்ஸ் டில்லலர்சன், நேற்று முன்தினம்(செவ்வாய் கிழமை)  இந்தியாவிற்கான மூன்று நாள் உத்தியோக விஜயத்தை மேற்கொண்டிருந்தார். இந்நிலையில், நேற்று(புதன்கிழமை) அவரை சந்தித்து பேசிய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஸ்மா சுவராஜ், அதன்பின்னர் ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவித்தபோதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அங்கு மேலும் தெரிவித்த வெளியுறவுத்துறை அமைச்சர் சுஸ்மா சுவராஜ்,

”பயங்கரவாதிகளுடன் கொண்டுள்ள உறவை பாகிஸ்தான் முற்றிலுமாக துண்டித்துக் கொள்ள வேண்டும் என, இந்த சந்திப்பின்போது அமெரிக்க இராஜாங்க செயலாிடம் எடுத்துரைத்துள்ளேன்.

பயங்கரவாதிகளுக்கு எதிராக பாகிஸ்தான் நடவடிக்கை எடுக்காவிடின், ஆசிய நாடுகளின் மீதான அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பின் புதிய கொள்கைகள், எந்த பலனையும் அளிக்காது என்பதையும் அவரிடம் சுட்டிக்காட்டினேன்.

மேலும், அமெரிக்க நாட்டில் குடியுரிமை பெறாமல் அங்கு தங்கியிருந்து வேலை செய்வதற்கு, வெளிநாட்டினருக்கு வழங்கப்படும் விசா பிரச்சினை குறித்தும், டில்லர்சனிடம் பேசினேன். அப்போது, குறித்த விவகாரத்தில் இந்தியர்கள் எவரும் பாதிக்கும் அளவிற்கு நடவடிக்கை எடுக்கவேண்டாம் என்றும், அவரிடம் வலியுறுத்தியுள்ளேன்” என்று இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா தெரிவித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg