Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சுயாதீனமாக செயற்பட முடியவில்லை – கைகள் கட்டப்பட்டுள்ளன! – சம்பிக்க

In இலங்கை
Updated: 05:02 GMT, Oct 26, 2017 | Published: 05:02 GMT, Oct 26, 2017 |
0 Comments
1264
This post was written by : Varshini

அரசாங்கத்தில் பெயரளவிலேயே அமைச்சராக பதவி வகிப்பதாகவும், கரங்கள் கட்டப்பட்டுள்ளதைப் போன்று சுயாதீனமாக செயற்பட முடியாத நிலை காணப்படுவதாகவும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க ஆதங்கம் வெளியிட்டுள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இவ்வாரம் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்திலேயே சம்பிக்க இக்கருத்தைக் குறிப்பிட்டுள்ளார்

தனது அமைச்சுக்கான நிதி முறையாக ஒதுக்கப்படுவதில்லையெனக் குறிப்பிட்டுள்ள சம்பிக்க, பெயரளவில் அமைச்சுப் பதவியை வைத்திருப்பதால் எவ்வித பயனும் இல்லையெனக் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, அபிவிருத்தித் திட்டங்களை சுயாதீனமாக முன்னெடுக்க முடியாத நிலை காணப்படுவதாகவும், இது நல்லாட்சியின் கோட்பாடுகளுக்கு ஏற்புடையதல்ல என்றும் அமைச்சர் சம்பிக்க மேலும் குறிப்பிட்டுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg