Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

முன்னாள் பிரதமரை கைது செய்யுமாறு பாகிஸ்தான் நீதிமன்றம் உத்தரவு!

In
Updated: 07:01 GMT, Oct 26, 2017 | Published: 07:00 GMT, Oct 26, 2017 |
0 Comments
1228
This post was written by : Risha
nawaz

பனாமா கேட் ஊழல் வழக்கில் சிக்கியுள்ள பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பிற்கு எதிராக, பிணையில் வெளிவர முடியாத பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் பொறுப்புக்கூறல் நீதிமன்றத்தினால் இன்று (வியாழக்கிழமை) இப்பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த விசாரணைகள் எதிர்வரும் நவம்பர் மாதம் 3ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கு முன்னர் முன்னாள் பிரதமரை நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறு பொலிஸாருக்கு பணிக்கப்பட்டுள்ளது.

நீதிமன்றத்தில் ஆஜராவதிலிருந்து ஏழு நாட்கள் விலக்கு அளிக்குமாறு வலியுறுத்தி விசாரணையின் தொடக்கத்தில் முன்னாள் பிரதமர் மனு சமர்ப்பித்திருந்தார்.

அத்துடன், லண்டனில் புற்றுநோய்க்காக சிகிச்சை பெற்றுவரும் மனைவியின் மருத்துவ அறிக்கைகளும் சமர்ப்பிக்கப்பட்டிருந்தன.

ஆனால், முன்னாள் பிரதமரின் மனுவை எதிர்த்த அரச வழக்கறிஞர், ஷெரிப் வேண்டுமென்றே பொறுப்புக்கூறல் நடவடிக்கைகளை மீறி வருவதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg