Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஹார்வர்ட் பல்கலைக்கழகத்திற்கு நிதி திரட்டும் தமிழக அரசு

In இந்தியா
Published: 11:02 GMT, Oct 27, 2017 |
0 Comments
1172
icon_com
This post was written by : Kemasiya
dfd

அமெரிக்காவில் உள்ள ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் தமிழ் மொழிக்கான இருக்கையை வழங்குவதற்கு, 10 கோடி ரூபாவை இந்திய தமிழக அரசு ஒதுக்கியுள்ளதாக, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று (வெள்ளிக்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

தமிழக இருக்கைக்கான அனுமதியை பெறவதற்கு, இந்திய மதிப்பில் சுமார் ரூ.40 கோடி தேவை. இதில் ரூ.6 கோடியே 70 இலட்சத்தை வைத்தியர்கள் ஜானகிராமன், சம்பந்தம் ஆகிய இருவரும் வழங்கியுள்ளனர். மீதமுள்ள ரூ.33 கோடிக்கு அதிகமான நிதியை உலக தமிழர்களிடம் நன்கொடையாக திரட்டி வரும் நிலையில், தமிழக அரசு தன் பங்காக 10 கோடி ரூபாய் வழங்கி உள்ளது.

ஜெயலலிதாவின் ஆட்சியில் 2016 பொதுத்தேர்தலின் போது, ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் தமிழை செம்மொழிகளில் ஒன்றாக்க தேவையான நிதியை தமிழக அரசு வழங்கும் என தெரிவித்திருந்தார். இந் நிலையில், அவரின் வழியில் செயற்படும் எடப்பாடி அரசு இந்த நிதியை ஒதுக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg