Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

நேபாளத்தில் பேரூந்து விபத்து: உயிரிழந்தோர் 31ஆக உயர்வு (இரண்டாம் இணைப்பு)

In உலகம்
Published: 08:54 GMT, Oct 28, 2017 |
0 Comments
1291
This post was written by : Suganthini


நேபாளத்தின் காத்மண்டு நகரிலுள்ள ஆற்றினுள் பேரூந்துவொன்று தடம்புரண்டு விழுந்ததில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 31ஆக உயர்வடைந்துள்ளது.

நேபாளத்தில் பேரூந்து ஆற்றில் விழுந்து விபத்து: 19 பேர் உயிரிழப்பு

நேபாளத்தின் காத்மண்டு நகரிலுள்ள ஆற்றினுள் பேரூந்துவொன்று தடம்புரண்டு விழுந்ததில், 19 பேர் உயிரிழந்துள்ளனர்.

அத்துடன், இந்தச் சம்பவத்தில் சாரதி உட்பட 16 பேர் படுகாயமடைந்துள்ள நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அதிகளவான பயணிகளை ஏற்றிக்கொண்டு இன்று (சனிக்கிழமை) அதிகாலை பயணித்த இந்தப் பேரூந்து, வீதியை விட்டு விலகிச்சென்று ஆற்றினுள் விழுந்துள்ளது.

இதுவரையில் 19 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. இன்னும் பலர் ஆற்றினுள் மூழ்கியுள்ள நிலையில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் எனவும் பொலிஸார் கூறியுள்ளனர்.

ஆற்றினுள் மூழ்கியவர்களை படகுகளில் சென்று படையினர் தேடி வருகின்றனர்.

விபத்து இடம்பெற்றமைக்கான சரியான காரணத்தை இதுவரையில் கண்டறியவில்லை என்று பொலிஸார் கூறியுள்ள அதேவேளை, பேரூந்துச் சாரதி மதுபோதையில் இருந்ததாக பயணிகள் தெரிவித்துள்ளனர்.

இருப்பினும், விபத்துத் தொடர்பாக விரிவான விசாரணையை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg