Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஜனநாயக எதிர்ப்பு நடவடிக்கைக்கு கதலோனியத் தலைவர் அழைப்பு

In
Updated: 04:57 GMT, Oct 29, 2017 | Published: 04:57 GMT, Oct 29, 2017 |
0 Comments
1250
This post was written by : Suganthini

ஸ்பெய்ன் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டின் கீழ் கதலோனியா கொண்டுவரப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, அங்கு ஜனநாயக எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபடுவதற்கு முன்வருமாறு கதலோனியத் தலைவர் கார்லெஸ் புகிடமொன்ட்  (Carles Puigdemont)  அழைப்பு விடுத்துள்ளார்.

வானொலிச்சேவையொன்றுக்கு நேற்று (சனிக்கிழமை) வழங்கிய நேர்காணலின்போதே, தனது கதலோனிய மக்களுக்கு அவர் இந்த அழைப்பை விடுத்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்தபோது, ‘கதலோனியாவானது, ஸ்பெய்ன் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. எமது நிலையை நாம் தக்கவைத்துக்கொள்ள வேண்டுமாயின் ஜனநாயக எதிர்ப்பு நடவடிக்கையை முன்னெடுப்பது சிறந்ததாகும். எனவே, ஜனநாயக எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபடுவதற்கு முன்வருமாறு மக்களுக்கு அழைப்பு விடுக்கின்றேன்’ என்றார்.

மேலும், ‘கதலோனியாவை சுதந்திரம் பெற்ற நாடாகக் கட்டியெழுப்புவதற்கான நடவடிக்கையில் நாம் தொடர்ந்து ஈடுபடுவோம். உலகிலுள்ள அனைத்து மக்களுக்கும் மேலாக சகோதரத்துவம், ஒற்றுமை, சமத்துவம் நீதி ஆகியற்றைக் கொண்ட சமுதாயத்தை உருவாக்குவதற்கான உத்தரவாதத்தை கதலோனியா மக்களுக்கு நாம் அளிக்கின்றோம்’ எனவும் அவர் கூறியுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg