Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அணு ஒப்பந்தம்: ட்ரம்ப்பின் தீர்மானத்தால் ஐரோப்பாவிற்கு நம்பிக்கையீனம்

In உலகம்
Updated: 10:09 GMT, Oct 29, 2017 | Published: 10:09 GMT, Oct 29, 2017 |
0 Comments
2283
This post was written by : Suganthini

ஈரானின் அணுசக்தித்திட்ட ஒப்பந்த விவகாரம் தொடர்பில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எடுத்துள்ள தீர்மானத்தால், ஐரோப்பிய ஒன்றியம் நம்பிக்கை இழக்கும் நிலைமை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2015ஆம் ஆண்டு ஈரானுக்கும் அமெரிக்கா உள்ளிட்ட 6 நாடுகளுக்கும் இடையில் செய்துகொள்ளப்பட்ட அணுசக்தித்திட்ட ஒப்பந்தத்தில் கையொப்பமிடுவதற்கு அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் மறுப்புத் தெரிவித்துள்ளார்.

அத்துடன், ஈரான் அணுசக்தித்திட்ட விவகாரம் தொடர்பில் பிரான்ஸ், பிரித்தானியா, ஜேர்மனி ஆகிய நாடுகளின் தலைவர்களிடமிருந்து விடுக்கப்பட்ட சாதகமான கோரிக்கைகளையும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் நிராகரித்துள்ளார்.

இதனை அடுத்தே, ஐரோப்பிய ஒன்றியத்துக்கு நம்பிக்கையீனம் ஏற்பட்டுள்ளதுடன், தற்போது அமெரிக்காவுடனான உறவில் பாரிய தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளதாகவும் ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

ஈரானுடன் செய்துகொள்ளப்பட்ட அணுசக்தித்திட்டமானது, அமெரிக்காவின் வரலாற்றில் மோசமானதொரு சம்பவம் என்பதுடன், ஈரான் பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் நடவடிக்கையிலும் ஈடுபடுகின்றது எனவும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் குற்றஞ்சாட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg