Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

நல்லிணக்கத்தை எவ்வாறு ஏற்படுத்தலாம்? – ஜப்பான் வழக்குத் தொடுநர் ஆலோசனை

In இலங்கை
Updated: 15:38 GMT, Oct 29, 2017 | Published: 11:32 GMT, Oct 29, 2017 |
0 Comments
1248
This post was written by : Varshini

”இலங்கையிலுனள்ள பாடசாலை மாணவர்கள் ஊடாகவும், அவர்கள் ஊடாக அவர்களது குடும்பத்திற்கும், குடும்பத்தின் ஊடாக சமூகத்திற்கும் நல்லிணக்க செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட வேண்டும். போருக்குப் பின்னர் உலக நாடுகளில் இவ்வாறே நல்லிணக்க செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன” என ஜப்பானிய வழக்குத் தொடுநர் நுகுசி தெரிவித்துள்ளார்.

தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அமைச்சில் இடம்பெற்ற கலந்துரையாடலில் அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் நல்லிணக்கத்திற்கான வேலைத்திட்டங்கள் காத்திரமாக உள்ள போதும், சவால்களை கடந்து அவற்றை சரியாக நிறைவேற்றுவது அவசியம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

குறிப்பாக, நிலைமாறுகால நீதிப் பொறிமுறையை செயற்படுத்தல், காணாமல் போனோர் பிரச்சினைக்கு தீர்வு, பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குதல் உள்ளிட்ட விடயங்களை உரிய உபாயங்களை கையாண்டு செயற்படுவத்துவது அவசியம் என நுகுசி மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, நிலைமாறுகால நீதிப் பொறிமுறை என்பது குறிப்பிட்டதொரு சமூகத்திற்கு மட்டும் உரியதல்ல எனக் குறிப்பிட்டுள்ள நுகுசி, எல்லா சமூகங்களுக்கும் இது அவசியமானதென்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg