Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கல்முனை மாநகர சபையினை 4 உள்ளுராட்சி சபைகளாகப் பிரிக்க வேண்டும்: ஹரீஸ்

In இலங்கை
Updated: 14:43 GMT, Oct 30, 2017 | Published: 14:43 GMT, Oct 30, 2017 |
0 Comments
1529
This post was written by : Anojkiyan

கல்முனை மாநகர சபையினை பிரிப்பதென்றால் நான்னு உள்ளுராட்சி சபைகளாகப் பிரிக்க வேண்டுமென்றும், கல்முனை மாநகரசபையிலிருந்து சாய்ந்தமருதுக்கான உள்ளுராட்சி சபையினை மட்டும் பிரிப்பதற்கு தான் ஒருபோதும் அனுமதிக்கப் போவதில்லை என பிரதியமைச்சர் எச்.எம்.எம். ஹரீஸ் தெரிவித்துள்ளார்.

கல்முனையில் நேற்று (ஞாயிறுக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் கூறுகையில்,

“கல்முனை பிரதேச செயலகத்தை தமிழர்கள் அபகரித்து விடுவார்கள் என்கிற அச்சம் இருக்கின்றமையினால், அதற்கு தடுப்பு வேலியாக இருக்கின்றேன். மேலும், கல்முனை கரையோர மாவட்டத்தைப் பெற்றெடுத்து, அதன் தலை நகரமாக கல்முனையை ஆக்கும் நோக்குடன், கடந்த ஒரு மாதத்துக்கு முன்னர் பிரதமரிடம் ஒரு மணித்தியாலம் பேசினேன். இதனையடுத்து, வருகின்ற யாப்பில் கல்முனை கரையோர மாவட்டத்தை உள்ளடக்குவதற்கு அவர் இணங்கியிருக்கின்றார்.

புதிய யாப்பின் மூலம் வடக்கு – கிழக்கை இணைப்பதற்கு தமிழ் கூட்டமைப்பு போராடி வரும் நிலையில், வடக்குடன் கிழக்கு இணைய முடியாது என்று நான் கூறியுள்ளதோடு, அதற்காக போராடியும் வருகின்றேன். சாய்ந்தமருது உள்ளுராட்சி சபை விடயமாக பைசர் முஸ்தபாவுடனான சந்திப்பில், ‘கல்முனை மாநகரசபையை நான்கு உள்ளுராட்சி சபைகளாகத்தான் பிரிக்க வேண்டும். தனியாக சாய்ந்தமருதுக்கான உள்ளுராட்சி சபையினை மட்டும் கல்முனை மாநகரசபையிலிருந்து பிரிக்கக் கூடாது’ என்று நான் சொன்னேன். இப்படி கூறியதால், சாய்ந்தமருது மக்கள் என்னை துரோகியாகப் பார்க்கின்றார்கள். இந்தக் கல்முனை மண்ணுக்காகத்தான் இவற்றினையெல்லாம் நான் எதிர்கொள்கிறேன்” என கூறினார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg