Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அரசியல் கைதிகளின் நிலையை சந்திரிகாவும் கண்டுகொள்ளவில்லையா? : சி.வி

In இலங்கை
Published: 09:17 GMT, Oct 31, 2017 |
0 Comments
1300
icon_com
This post was written by : Arul Jesu

அனுராதபுரம் சிறையில் உண்ணாவிரதமிருக்கும் சிறைக்கைதிகளின் பரிதாபகரமான நிலையை கவனத்தில் கொண்டு அவர்களுக்கான தீர்வை விரைந்து வழங்க முன்வர வேண்டும் என வடமாகாண முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன் கோரியுள்ளார்.

தமிழ் அரசியல் கைதிகள் மூவர் மேற்கொண்டு வரும் தொடர் உண்ணாவிரதம் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதியும், தேசிய ஒருமைப்பாட்டிற்கும் நல்லிணக்கத்திற்குமான தலைவருமான சந்திரிகா பண்டாரநாயக குமாரணதுங்கவுக்கு விக்னேஸ்வரன் இன்று அவசர கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

அந்த கடிததத்திலேயே அவர், மேற்குறித்த விடயத்தை தெளிவுபடுத்தியுள்ளதுடன், இவர்கள் தொடர்பான வழக்கை அரசு தமது அரசியல் காரணங்களுக்காக பயன்படுத்துகின்றதா? என்ற சந்தேகம் எழுந்துள்ளதாகவும் கூறியுள்ளார்.

விசாரணைகள் ஆரம்பமாக முன்னரே பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜயவர்த்தன உண்ணாவிரதமிருக்கும் சிறைக்கைதிகளை விடுதலைப்புலிகள் என முத்திரைகுத்தியுள்ளதாகவும் அவர் தமது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் சிறைக்கைதிகள் தாங்கள் விடுதலைப்புலிகளுடன் எந்தவிதமான தொடர்புகளையும் பேணவில்லை என தெரிவிக்கின்றனர், ஆனபடியால் அவர்களை யாரென அடையாளப்படுத்த பொறுமையுடன் நீதிமன்ற விசாரணையை எதிர்பார்த்திருத்தல் வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

எனவே ருவான் விஜயவர்த்தன, அவர்களை விடுதலைப்புலிகள் என குறிப்பிட்டமை அவருடைய கண்ணியமற்ற பொறுப்பற்றதனத்தையே எடுத்துக்காட்டுவதாகவும், முன்னாள் வடக்கு முதல்வர் தெளிவுபடுத்தியுள்ளார்.

எப்படியிருப்பினும் சாட்சிகளின் நன்மைக்காக மட்டும் வழக்குகளை ஒரு நீதிமன்றிலிருந்து இன்னொன்றுக்கு மாற்றுதல் நியாயமானதல்ல என குறிப்பிட்டுள்ள அவர், எனவே இந்த வழக்கின் சாட்சிகளை அவர்களின் பாதுகாப்பிற்காக வவுனியாவிலிருந்து அனுராதபுரத்திற்கு மாற்றுவதென்பது வேடிக்கையானது எனவும் கூறியுள்ளார்.

சாட்சியாளர்கள் சட்டமா அதிபரிடமிருந்து பாதுகாப்புக் கோரியிருந்தால் அப்படியாகப் பெற்றுக் கொண்ட ஆவணத்தின் வகையை சட்டமாஅதிபர் பகிரங்கமாக வெளியிடவேண்டும் எனவும் அவர் சவால் விடுத்துள்ளார்.

ஆகவே வழக்கை அனுராதபுரத்திற்கு மாற்றியமையானது குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தின் அடிப்படையில் மட்டும் குற்றவாளிகளாகக் காணும் அரசியல் நோக்கமேயன்றி வேறெதுவும் இல்லை என விக்னேஸ்வரன் தனது கடிதத்தில் சுட்டிகாட்டியுள்ளார்.

அனுராதபுர மேல் நீதிமன்றம் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் ஒப்புதல் வாக்குமூலத்தை மாத்திரம் வைத்தே பலரைக் குற்றவாளிகளாகக் கண்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனவே இவ்வாறான சூழ்நிலையில் இந்த விடயத்தில் கரிசனை எடுத்து இவர்களின் வழக்குகளை வவுனியாவிற்குத் திருப்பி அனுப்புவதற்கு அல்லது யாழ்ப்பாண மேல் நீதிமன்றிற்கு மாற்றுவதற்கு உதவுமாறு விக்னேஸ்வரன், சந்திரிக்காவிடம் கோரியுள்ளார்.

இந்த கடிதத்தை கடந்த 16 ஆம் திகதி முதல்வர், சந்திரிக்காவுக்கு அனுப்பியிருந்த நிலையில், அதற்கு இதுவரை பதில் வழங்கப்படாத நிலையில் இன்று ஊடகங்களுக்கு அனுப்புவதாக முதலமைச்சரின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg