Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஸிம்பாவே ஜனாதிபதிக்கு எதிராக டுவீட் செய்தவர் கைது

In உலகம்
Updated: 05:30 GMT, Nov 4, 2017 | Published: 05:30 GMT, Nov 4, 2017 |
0 Comments
1191
This post was written by : Suganthini

ஸிம்பாவே ஜனாதிபதி ரொபர்ட் முகாபேயை அவமதிக்கும் வகையில் டுவிட்டரில் பதிவுசெய்த அமெரிக்காவைச் சேர்ந்த பெண்ணொருவர் மீது, பொலிஸார் வழக்குத் தாக்கல் செய்துள்ளதாக அப்பெண்ணின் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியை சுயநலமானவர் மற்றும் நோயாளி என்று 25 வயதான அப்பெண் குறிப்பிட்டதாகக் கூறி, முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டை அவர் மறுத்துள்ளார்.

ஜனாதிபதியை அவமதித்தமை மற்றும் அரசாங்கத்தைக் கவிழ்ப்பதற்கான திட்டமிடுதல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் அவர் மீது வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கான திட்டமிடுதல் என்ற குற்றச்சாட்டுக்காக, அவருக்கு 20 ஆண்டுகள்வரை சிறைத்தண்டனை கிடைக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அப்பெண்ணின் இல்லத்தில் நடத்திய சோதனையின்போது, அவர் கைதுசெய்யப்பட்டார் என, ஸிம்பாவே மனித உரிமைகளுக்கான வழக்கறிஞர் தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg