Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

குஜராத்தில் இடம்பெற்ற விபத்தில் 13 பேர் உயிரிழப்பு!

In இந்தியா
Published: 11:26 GMT, Nov 7, 2017 |
0 Comments
1165
icon_com
This post was written by : Kemasiya
download

குஜராத் அகமதாபாத்தில் இன்று (செவ்வாய்கிழமை) காலை 3 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில், 13 பேர் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளனர்.

அகமதாபாத்திலிருந்து 25 பேருடன் புறப்பட்ட ஜீப் வாகனம் மற்றும் பொருட்களை ஏற்றி சென்ற லொறி ஆகியன மோதுண்டதில், இந்த விபத்து சம்பவித்துள்ளது.

இதில் 6 பெண்கள், ஒரு குழந்தை உட்பட, மேலும் 12 பேர் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளதாகவும், மேலும் 9 பேர் படுகாயமடைந்த நிலையில், அருகில் உள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந் நிலையில், ஜீப் சாரதியின் தூக்கம் காரணமாகவே இந்த விபத்து இடம்பெற்றிருக்க கூடும் என சந்தேகிக்கும் பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg