Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இருநாட்டு பாதுகாப்பு குறித்து பிரித்தானியா- அமெரிக்கா பேச்சு

In
Updated: 10:10 GMT, Nov 11, 2017 | Published: 10:10 GMT, Nov 11, 2017 |
0 Comments
1272
This post was written by : Risha

பிரித்தானியாவிலும், அமெரிக்காவிலும் காணப்படும் பாதுகாப்பு பிரச்சினைகள் தொடர்பில், இருநாட்டு பாதுகாப்பு அமைச்சர்கள் கலந்துரையாடியுள்ளனர்.

அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் ஜேம்ஸ் மட்டிஸ் பிரித்தானியாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள நிலையில், பாதுகாப்பு அமைச்சில் நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற சந்திப்பில் இது தொடர்பில் விவாதிக்கப்பட்டுள்ளது.

லண்டனுக்கு விஜயம் செய்த அமெரிக்க அமைச்சரை, பிரித்தானியாவின் புதிய பாதுகாப்பு அமைச்சர் கவின் வில்லியம்சன் வரவேற்றார்.

அதனை தொடர்ந்து பாதுகாப்பு அமைச்சில் இரு தரப்பினருக்கும் இடையிலான பேச்சுவார்த்தை இடம்பெற்றது. அதன்போது இருநாட்டு பாதுகாப்பு பிரச்சினைகள் குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டது.

பிரித்தானிய- அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர்களுக்கு இடையிலான முதல் சந்திப்பில், இரு நாட்டிற்கும் இடையிலான சிறந்த உறவு குறித்து அமெரிக்க அமைச்சர் பாராட்டும் தெரிவித்துள்ளார்.

பாலியல் அவதூறு வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு, பிரித்தானியாவின் பாதுகாப்பு அமைச்சராக இருந்த மைக்கல் ஃபலோன் அண்மையில் பதவி விலகியதை தொடர்ந்து, பிரித்தானிய புதிய பாதுகாப்பு அமைச்சராக கவின் வில்லியம்சன் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg