Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சிரியாவில் விமானத் தாக்குதல்: 29 பேர் உயிரிழப்பு

In உலகம்
Updated: 04:59 GMT, Nov 14, 2017 | Published: 04:59 GMT, Nov 14, 2017 |
0 Comments
1328
This post was written by : Elakkiya

ஐ.எஸ் பயங்கரவாதிகளின் கட்டுப்பாட்டிலுள்ள சிரியாவின் மேற்கு அலெப்போ மாகாணத்தில் இடம்பெற்ற விமானத் தாக்குதலில் 29 பொதுமக்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அராரெப் நகரின் சந்தைப் பகுதியை இலக்கு வைத்து நேற்று (திங்கட்கிழமை) இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகவும் தாக்குதலில் அப்பாவிப் பொதுமக்களே உயிரிழந்துள்ளதாகவும் பிரித்தானியாவை தளமாக கொண்டு இயங்கும் சிரிய மனித உரிமை கண்காணிப்பகம் அறிவித்துள்ளது. உயிரிழந்தவர்களுள் ஐந்து சிறுவர்களும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.

தாக்குதல் இடம்பெற்ற நேரத்தில் ரஷ்ய விமானம் பறப்பில் ஈடுபட்டதாக நகர குடியிருப்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். எனினும் தாக்குதலை அரச படை நடத்தியதா அல்லது ரஷ்ய படை நடத்தியதா என்பது தொடர்பில் எவ்வித தகவலும் வெளிவரவில்லை.

கடந்த ஒக்டோபர் முதலாம் திகதியும் குறித்த பகுதியில் தாக்குதல் நடத்தப்பட்டதில் 28 பேர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg