Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வவுனியா, விவசாய கல்லூரி மாணவர் படுகொலை நினைவு நாள் அனுஷ்டிப்பு!

In இலங்கை
Published: 13:57 GMT, Nov 18, 2017 |
0 Comments
1178
icon_com
This post was written by : Ravivarman
20171118_094247

வவுனியா விவசாயக் கல்லூரியில் பாடவேளையில் செயன்முறையில் ஈடுபட்டிருந்த மாணவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட 5 மாணவர்களின் 11 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று (சனிக்கிழமை) கல்லூரியில் அனுஸ்டிக்கப்பட்டது.

விவசாய கல்லூரி மாணவர்களின் ஏற்பாட்டில் கல்லூரி பிரதான மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட இந் நிகழ்வில் படுகொலை செய்யப்பட்ட 5 மாணவர்களுக்கும் மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

இதனையடுத்து படுகொலை செய்யப்பட்ட மாணவர்களின் நினைவாக  மரக்கன்றுகள் நடப்பட்டதுடன் இரத்ததான நிகழ்வும் இடம்பெற்றிருந்தது.

இந் நிலையில் குறித்த படுகொலை சம்பவம் தொடர்பான விசாரணைகள் அனுராதபுரம் நீதிமன்றத்தில் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

IMG20171118104413 20171118_094118 20171118_094012 20171118_093954 20171118_093544

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg