Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இலங்கை கடற்படையை முடக்கி வைக்க வேண்டும்: ராதாகிருஷ்ணன்

In இந்தியா
Published: 10:20 GMT, Nov 20, 2017 |
0 Comments
1133
icon_com
This post was written by : Kemasiya

தமிழக மீனவர் பிரச்சனைக்குத் தீர்வு காண, இலங்கை கடற்படையை முடக்கி வைக்க வேண்டும் என, மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

தூத்துக்குடி விமான நிலையத்தில வைத்து, நேற்று (ஞாயிற்றுக்கிழமை) செய்தியாளர்களை சந்தித்த அவர், மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இது குறித்து மேலும் தெரிவித்த அவர்,

“இலங்கை இந்திய கடற்பரப்பில், அத்துமீறி பிரவேசித்தாக 8 இந்திய மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

இந்தப் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டுமாயின், இப் பிரச்சினை குறித்து பிரதமர் மோடி நேரடியாக தலையிட வேண்டும்.

அத்துடன் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஸ்மா சுவராஜ்யும், இது தன் வீட்டு பிரச்சினை என்பதை மனதில் வைத்து, தீர்வு காண முன்வர வேண்டும்.

இவை சரிவர இடம்பெறுமாயின், இப் பிரச்சினைக்கு ஒரு தீர்க்கமான முடிவு எட்டப்படும். அதுவரைக்கும் இலங்கை கடற்படையை முடக்கி வைக்க வேண்டும்.”  என, அவர் தெரிவித்துள்மை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg