Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

நாடாளுமன்ற கூட்டத் தொடர் விரைவில் இடம்பெற வேண்டும்: காங்கிரஸ் வலியுறுத்தல்!

In இந்தியா
Updated: 09:25 GMT, Nov 24, 2017 | Published: 09:25 GMT, Nov 24, 2017 |
0 Comments
1100
icon_com
This post was written by : Kemasiya
fd

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரை உடனடியாக கூட்டுவதற்கு, மத்திய அரசிற்கு அழுத்தம் கொடுக்க  வேண்டும் என, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்திடம் காங்கிரஸ்  வலியுறுத்தியுள்ளது.

காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற குழுவினர், கடந்த 21 ஆம் திகதி ராம்நாத் கோவிந்திற்கு எழுதிய கடிதத்தின் மூலமே, மேற்படி வலியுறுத்தியுள்ளனர்.

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர், நவம்பர் மாதத்தில் கூடுவது வழக்கம். ஆனால், எவ்வித காரணமும் இல்லாமல் நாடாளுமன்றத்தைக் கூட்டாமல், மத்திய அரசு காலம் தாழ்த்தி வருகிறது.

இந் நிலையில், குஜராத் சட்டப்பேரவைக்கு அடுத்த மாதம் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த நேரத்தில் நாடாளுமன்றத்தைக் கூட்டினால், அரசின் தவறான கொள்கைகள் மற்றும் ஊழல் புகார்களை எதிர்க்கட்சிகள் சுட்டிக்காட்டும் என, அரசு கருதுவதால் தான், நாடாளுமன்றம் கூட்டப்படவில்லை என, காங்கிரஸ் கருத்துக்களை வெளியிட்டு வருகிறமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg