Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சாவகச்சேரியில் ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல்

In இலங்கை
Updated: 08:51 GMT, Dec 3, 2017 | Published: 08:38 GMT, Dec 3, 2017 |
0 Comments
1098
icon_com
This post was written by : Risha
attack logo

சாவகச்சேரி நகர் பகுதியில் முச்சக்கர வண்டியில் வந்த இரண்டு மர்ம நபர்கள் ஊடகவியளாளர்கள் மீது தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.

இத்தாக்குதல் சம்பவம் சாவகச்சேரி தனங்களப்பு வீதியில் நேற்று (சனிக்கிழமை) மாலை சம்பவித்துள்ளது.

குறித்த ஊடகவியலாளர்கள் பணியிடத்திலிருந்து வீட்டிற்கு சென்றுக் கொண்டிருந்த போது, முச்சக்கர வண்டியில் வந்தவர்கள், ஊடகவியலாளர்கள் பயணித்த வாகனத்தை மறித்து தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இதன்போது, அங்கு அருகிலிருந்த பள்ளிவாசலில் தொழுகை முடிந்து வந்தவர்கள் ஊடகவியலாளர்களை காப்பாற்ற முற்பட்ட போது அவர்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

பின்னர் குறித்த மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். தாக்குதலின்போது குறித்த நபர்கள் அரசியல் ஆதிக்கமிக்க நபர் ஒருவரின் பெயரை உச்சரித்திருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg