Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அத்லாண்டிக், பசுபிக் பெருங்கடலுக்கு மத்தியில் நீந்தி கனேடியர் சாதனை

In கனடா
Updated: 11:23 GMT, Dec 3, 2017 | Published: 11:21 GMT, Dec 3, 2017 |
0 Comments
1077
icon_com
This post was written by : Elakkiya
625.0.560.320.160.700.053.800.668.160.90

அத்லாண்டிக் மற்றும் பசுபிக் பெருங்கடலுக்கு மத்தியில் நீந்தி கனேடிய ஒருவர் சாதனை நடத்தியுள்ளார்.

ஒன்ராறியோவில் மென்பொருள் மேம்பாட்டாளராக பணிபுரியும் 47 வயதான மது நாகராஜா என்பவரே இந்த சாதனையை படைத்துள்ளார். கடந்த நவம்பர் மாதம் 29 ஆம் திகதி தென் அமெரிக்காவின் முனைப் பகுதியில் சுமார் 3.9 கிலோ மீற்றர் தூரத்தை நீந்திக் கடந்துள்ளார்.

இதன் மூலம் மக்கெலன் பகுதியில் வெற்றிகரமாக நீந்திக்கடந்த முதல் கனேடியர் என்ற சாதனையையும் உலகளாவிய ரீதியில் 23 ஆவது நபர் என்ற சாதனையையும் படைத்துள்ளார்.

இது தொடர்பாக சாதனையாளர் நாகராஜா தெரிவிக்கையில், தனித்துவமான புவியில் அமைப்பு பல ஊக்கங்களை வழங்குவதாகவும் அதன் மூலமாகவே 4 செல்சியஸ் குளிர்ந்த நீரில் மணிக்கு 50 கிலோ மீற்றர் வேகத்தில் வீசக்கூடிய காற்றை எதிர்த்து நீந்தக் கூடியதாகவே இருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

கடந்த 2015 ஆம் ஆண்டும் இதேமுயற்சியை மேற்கொண்ட போதிலும் நாகராஜா தோல்விகண்டிருந்தார்.

இந்நிலையில் கடைசியாக தான் சந்தித்த தோல்வியே ஒரு மணிநேரம் 19 நிமிடங்களில் நீந்தி சாதனை படைக்க உந்துதலாக இருந்தது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg