Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அமைச்சுப் பணிகள் கண்டுகொள்ளப்படவில்லை : பைஸர் முஸ்தபா

In இலங்கை
Updated: 09:26 GMT, Dec 5, 2017 | Published: 06:29 GMT, Dec 5, 2017 |
0 Comments
1192
icon_com
This post was written by : Puvanes

எதிர்மறையான விமர்சனங்களுக்கும் செய்திகளுக்கும் மாத்திரம் தொடர்ச்சியாக முன்னுரிமை அளிக்காமல் அமைச்சின் மூலமாக செயற்படுத்தப்பட்ட அபிவிருத்திகள் குறித்தும் பேசுமாறு உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகசந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.

தொடர்ந்தும் அவர் அங்கு கருத்து தெரிவிக்கையில்,

“எமது அமைச்சின் மூலமாக பல்வேறுபட்ட அபிவிருத்தி பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இந்த வருடத்தில் மாத்திரம் சுமார் ஐயாயிரத்திற்கும் அதிகமான அபிவிருத்தி செயற்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

ஆனால் தொடர்ந்தும் எமது அமைச்சில் வழக்குகள் உள்ளன, தேர்தல்கள் இழுபறி நடத்தப்படுகின்றன போன்ற விடயங்களை மட்டும் ஊடகங்கள் விமர்சிக்காமல் ஆக்கபூர்வமாக எமது அமைச்சு முன்னெடுத்த நடவடிக்கைகள் பற்றி பேசுங்கள்.

அதேபோன்று எமது அமைச்சானது ஊழல்கள் இல்லாமல் செயற்பட்ட ஒன்றாகும். நான் சுதந்திரக்கட்சியில் அங்கத்துவம் வகிக்கும் அமைச்சராக இருந்தாலும் கட்சி பாகுபாடு இன்றியே மக்கள் பணிகளில் ஈடுபட்டு வருகின்றேன்.

எந்தநிலையிலும் ஏனைய அமைச்சர்களைப் போன்று அவரரவர் தொகுதிகளுக்கு மட்டும் நிதி ஒதுக்கி அபிவிருத்திகளை முன்னெடுக்கவில்லை. அமைச்சராக பதவி வகிப்பது மக்கள் சேவைக்காகவே அதனை சரியாகவே நான் செய்துவருகின்றேன்” என பைஸர் முஸ்தபா தெரிவித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)