Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அதிக தூக்கம் ஆரோக்கியத்திற்கு ஆபத்து!

In
Published: 14:10 GMT, Dec 7, 2017 |
0 Comments
1123
icon_com
This post was written by : Vithushagan
p38a_16357

ஒரு மனிதனின் வாழ்வின் ஆரோக்கியத்தில் தூக்கம் மிக முக்கிய பங்களிக்கின்றது. மனிதனின் அன்றாட செயற்பாடுகளில் ஓய்வு மிகவும் அவசியமான ஒன்றாக இருப்பதானாலேயே மனிதனுக்கு தூக்கம் கட்டாயக் கடமையாக்கப்பட்டுள்ளது.

தூக்கமின்மை மனிதனுக்கு பல நோய்களை வரவழைக்கும். அதேபோன்றுதான் அதிக தூக்கமும் பல பிரச்சினைகளை கொண்டு வருகின்றது என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

8 மணி நேரத்துக்கு மேல் தூங்குவது பக்கவாதம் வரும் அபாயத்தை அதிகரிக்கும். மற்றவர்களை விட அதிக நேரம் தூங்குபவர்களுக்கு 46 சதவீதம் இந்த பாதிப்பு அதிகமாக ஏற்படும் என்றும் ஆய்வுகள் கூறுகின்றன.

பிரிட்டனிலுள்ள கெம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் மேற்கொண்ட ஒரு ஆய்வின்படி, அளவாக தூங்குகிறவர்களை விடவும் அதிக நேரம் தூங்குகிறவர்களுக்கு 4 மடங்கு அதிகமாக பக்கவாதம் ஏற்பட்டிருந்தது.

இவ்வாறு ஏற்படுவதற்கு என்ன காரணம் என ஆய்வு செய்ததில், எப்போதும் போலவே அதீத கொழுப்பு, உயர் இரத்த அழுத்தம், உடற்பருமன், உடல் செயல்பாடு குறைவு ஆகியவையே இதற்கு காரணமாக இருந்தது.

6 முதல் 8 மணி நேரத் தூக்கமே ஆரோக்கியமானது என்பதையும் அந்த ஆய்வு குறிப்பிட்டுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)