Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அடிலெய்ட் மைதானத்தில் திருமணம் செய்யுங்கள்: கோஹ்லியிடம் கோரிக்கை

In கிாிக்கட்
Published: 11:02 GMT, Dec 8, 2017 |
0 Comments
1731
icon_com
This post was written by : Sujitharan
maxresdefault (1)

இந்திய அணியின் தலைவர் விராட் கோஹ்லியின் திருமணத்தை நடத்த அவுஸ்ரேலியாவின் புகழ் பெற்ற கிரிக்கட் மைதானமான அடிலெய்ட் ஓவல் மைதான நி்ர்வாகம் விருப்பம் தெரிவித்துள்ளது.

அவரது திருமணம் இத்தாலியின் மிலன் நகரில் நடைபெறவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ள நிலையில்,  அடிலெய்ட் ஓவல் மைதான நிர்வாகம் தன் விருப்பத்தினையும் வெளிப்படுத்தியுள்ளது.

இலங்கைக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நேற்று முன்தினம் நிறைவடந்த நிலையில், அந்த அணிக்கு எதிரான ஒருநாள் மற்றும் ரி-ருவென்ரி தொடருக்கான இந்திய அணியில் இருந்து வீராட் கோலிக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளது.

கடந்த சில ஆண்டுகளாக பாலிவுட் நடிகை அனுஷ்கா ஷர்மைாவை காதலித்து வரும், 29 வயதாகும் விராட் கோஹ்லிக்கு 20 நாட்கள் விடுமுறை கிடைத்துள்ளது.

இந்த விடுமுறை நாளில், விராட் கோஹ்லி அவரது அன்புக் காதலியை, மிலன் நகரில் திருமணம் செய்து கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளபோதிலும், கோஹ்லி தரப்பிலிருந்து எதுவித தகவல்களும் வெளிவரவில்லை.

இந்நிலையில் அவுஸ்ரேலியாவின் புகழ்பெற்ற மைதானங்களில் ஒன்றான அடிலெய்ட் ஓவல் மைதான பிரதான நிறைவேற்று அதிகாரி இந்த கோரிக்கையினை முன்வைத்துள்ளார்.

ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு பேட்டியளித்த அவர், ”விராட் கோலி – அனுஷ்கா திருமணம் அடிலெய்ட் ஓவல் மைதானத்தில் நடைபெற்றால் அது சிறப்பானதாக இருக்கும் என்று கூறியுள்ளார்.

2012 ஆம் ஆண்டில் அடிலெய்ட் முதல் சதத்தை பதிவு செய்த விராட் கோலி, அங்கு மூன்று சதங்களைப் பெற்றுள்ளார். ரி-ருவென்ரி கிரிக்கெட்டில் தனது அதிகபட்ச ஓட்டமான 90 ஓட்டங்களையும் அவர் அங்குதான் பெற்றுக் கொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)