Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

25 ஆயிரம் சிறுவர்கள் சூதாட்டப் பிரியர்களாக உள்ளனர்: புள்ளிவிவரத் தகவல்

In
Published: 11:48 GMT, Dec 12, 2017 |
0 Comments
1108
This post was written by : Suganthini
uk

பிரித்தானியாவிலுள்ள சிறுவர்களில் பெருமளவானோர், கணினி விளையாட்டுகள் மற்றும் சமூக வலைத்தளங்கள் ஊடாக சூதாட்டத்தில் ஈடுபடுகின்றமை தெரியவந்துள்ளதாக, சூதாட்ட ஆணையகம் எச்சரித்துள்ளது.

11 வயது முதல் 16 வயதுவரையான 25 ஆயிரம் சிறுவர்கள் சூதாட்டப் பிரியர்களாக உள்ளமை தொடர்பாக புதிய புள்ளிவிவரத் தகவலில் தெரியவந்துள்ளதாகவும், அவ்வணையகம் கூறியுள்ளது.

இங்கிலாந்து, ஸ்கொட்லாந்து, வேல்ஸ் ஆகிய பகுதிகளில் 12 சதவீதமான சிறுவர்கள் சூதாட்டத்தில் ஈடுபட்டமை கடந்த வாரம் கண்டுபிடிக்கப்பட்டது.

கணினி விளையாட்டுகள் மற்றும் சமூக வலைத்தளங்கள் ஊடாக இலவசமாக சூதாட்ட விளையாட்டுகளை விளையாட சிறுவர்களுக்கு சந்தர்ப்பம் கிடைத்துள்ளது.

சிறுவர்கள் சூதாட்டத்துக்குள் சிக்கியுள்ளமை கவலையை ஏற்படுத்தியுள்ளதென்பதுடன், பிரித்தானியாவில் இந்த நிலைமை நீடித்தால் எதிர்காலத்தில் பாரிய ஆபத்துக்கு வழிவகுக்குமெனவும், அவ்வணையகம் கூறியுள்ளது.

எனவே, தீங்கு பயக்கும் சூதாட்ட விளையாட்டுகளில் சிறுவர்கள் ஈடுபடுவதைத் தடுத்து, அவர்களை மறுசீரமைப்பதற்காக சிறந்த கல்வி நடவடிக்கை தேவையெனவும், அவ்வணையகம் வலியுறுத்தியுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg