Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சென்னையில் புத்தாண்டுக் கொண்டாட்டங்களில் விபத்துகள்: இருவர் உயிரிழப்பு!

In இந்தியா
Updated: 08:17 GMT, Jan 1, 2018 | Published: 08:17 GMT, Jan 1, 2018 |
0 Comments
1131
This post was written by : Ravivarman

சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது ஏற்பட்ட விபத்துகளில் 179 பேர் படுகாயம் அடைந்துள்ளதுடன் 2 பேர் உயிரிழந்துள்ளனர்.

சென்னையில் மட்டும் நேற்று நள்ளிரவு முதல் இன்று காலை வரை பல்வேறு இடங்களில் ஏற்பட்ட சாலை விபத்துக்களில் 179 பேர் காயமடைந்திருப்பதாகவும், 2 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காயமடைந்தவர்களில் 166 பேர் அந்தந்தப் பகுதியில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்ததுடன், அவர்களில் 84 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடந்த வீதி விபத்துக்களில் 11 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஆங்கிலப் புத்தாண்டு பிறந்ததையொட்டி நேற்று நள்ளிரவில் பொதுமக்கள் கேக் வேட்டியும், இனிப்பு வழங்கியும், பட்டாசுகள் வெடித்தும் கொண்டாடினர்.

இளைஞர்கள் பொது இடங்களில் கூடி ஒருவருக்கொருவர் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்ததுடன், ‘ஹப்பி நியூ இயர்’ என்று உற்சாக முழக்கமிட்டபடி இளைஞர்கள் வாகனங்களில் வேகமாகச் செலுத்திச் சென்றமையையும் அவதானிக்க முடிந்தது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg