Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ரயில் பயணக் கட்டணம் அதிகரிப்பு

In
Published: 09:02 GMT, Jan 2, 2018 |
0 Comments
1100
icon_com
This post was written by : Suganthini
train

பிரித்தானியாவில் ரயில் பயணக் கட்டணம் 3.4 சதவீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக, போக்குவரத்துத்துறைத் திணைக்களம் அறிவித்துள்ளது.

பிரித்தானியாவில் கடந்த 2013ஆம் ஆண்டு ரயில் கட்டணம் அதிகரிக்கப்பட்டதைத் தொடர்ந்து, தற்போது இக்கட்டண அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இக்கட்டண அதிகரிப்பு இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் நடைமுறைக்கு வருவதாகவும், அத்திணைக்களம் கூறியுள்ளது.

இது பாரிய கட்டண அதிகரிப்பெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுமார் 100 பவுண்ட்டினால் அனைத்து ரயில் கட்டணங்களும் அதிகரிக்கப்பட்டுள்ளன. லிவர்பூலில் – மன்செஸ்டர்வரை 108 பவுண்ட் முதல் 3,152 பவுண்ட்வரையும், மைடென்ஹெட் (Maidenhead ) லண்டன்வரை 104 பவுண்ட் முதல் 3,092 பவுண்ட்வரையும் எல்கின் (Elgin) – இன்வெர்னெஸ் (Inverness ) வரை 100 பவுண்ட் முதல் 2,904 பவுண்ட்வரையும் கட்டண அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதேவேளை, ரயில் கட்டண அதிகரிப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து, 40 ரயில் நிலையங்களில் ஆர்ப்பாட்டஙகளில் ஈடுபட ஆர்ப்பாட்டக்கார்கள் தீர்மானித்துள்ளனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)