Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

முத்தலாக் சட்ட மூலத்தினால் பெண்களுக்கு உரிமை கிடைக்காது: மம்தா பானர்ஜி!

In இந்தியா
Updated: 03:28 GMT, Jan 4, 2018 | Published: 03:28 GMT, Jan 4, 2018 |
0 Comments
1156
This post was written by : Kemasiya

முத்தலாக் சட்ட மூலத்தினால் பெண்களுக்கு உரிய அதிகாரம் கிடைக்கப் போவதில்லை என, மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற மக்களவையில் முத்தலாக் தொடர்பான சட்டமூலம் தாக்கல் செய்யப்பட்டதை தொடர்ந்து, ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவித்த அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர்,

“பெண்களின் உரிமையை பாதுகாக்கும் விடயத்தில் பா.ஜ.க. அசிங்கமான அரசியல் நடத்துகிறது.

இந்த முத்தலாக் சட்டமூலத்தினால் பெண்களுக்கு உரிய அதிகாரம் அளிக்க முடியாது. மாறாக இந்த மசோதா பெண்களுக்கு அதிக பாதிப்பை தான் கொடுக்கும்.

நாடாளுமன்றத்தில் பெண்களுக்கு 33சதவீதம் இட ஒதுக்கீடு அளிக்கும் மசோதா இன்னும் நிறைவேற்றப்படவில்லை.

பெண்களின் உரிமைகளை பாதுகாப்பதில் நாங்கள் அதிக அக்கறை கொண்டுள்ளோம். அனைத்து மதத்திலும் நான் நம்பிக்கை வைத்துள்ளேன். ஆனால் பா.ஜ.க. ஒரு மதம் சார்ந்த ஆட்சியை நடத்தி வருகிறது” என அவர் தெரிவித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg