Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஸ்டெயினால் மீண்டும் தென்னாபிரிக்க அணிக்கு சிக்கல்!

In கிாிக்கட்
Updated: 05:52 GMT, Jan 4, 2018 | Published: 05:52 GMT, Jan 4, 2018 |
0 Comments
1203
This post was written by : Anojkiyan

இந்திய அணிக்கெதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில், தென்னாபிரிக்க அணியின் வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெயின் விளையாடுவது சந்தேகத்திற்கிடமாகியுள்ளது.

உபாதைகளால் அவதிப்பட்டு பலவித எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் மீண்டும் அணிக்கு திரும்பியுள்ள ஸ்டெயின், முதல் போட்டியில் பங்கேற்காது இரண்டாவது போட்டியில் பங்கேற்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அவரது உடற்தகுதியே இதற்கு காரணம் என தெரிவிக்கப்பட்டாலும், இதுகுறித்த உத்தியோகபூர்வ அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை.

மூன்று போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி, நாளை கேப்டவுணில் ஆரம்பமாகவுள்ளது. இரண்டாவது டெஸ்ட் போட்டி செஞ்சுரியனில் 13ஆம் திகதியும், மூன்றாவது டெஸ்ட் போட்டி 24ஆம் திகதி ஜோகன்னஸ்பர்க்கிலும் நடைபெறவுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg