Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஐ.பி.எல். தொடரில் எந்த அணிகள் எந்த வீரர்களை தக்கவைத்துக் கொள்கிறது? முழு விபரம் இதோ

In கிாிக்கட்
Updated: 06:41 GMT, Jan 4, 2018 | Published: 06:39 GMT, Jan 4, 2018 |
0 Comments
2729
This post was written by : Anojkiyan
cl_IPL1

நடப்பு ஆண்டு நடைபெறவுள்ள ஐ.பி.எல் தொடரில் இடம்பெற்றுள்ள அணிகள், தக்கவைத்துக்கொள்ள விரும்பும் வீரர்களின் விருப்ப பட்டியலை வெளியிட்டுள்ளது.

இதன்படி, ரிஷாப் பந்த், ஷ்ரேயஸ் ஐயர் ஆகியோரை டெல்லி அணி கேட்டு இருக்கிறது. சுனில் நரேன், கிறிஸ் லைன் ஆகியோர் கொல்கத்தா அணியால் எடுக்கப்பட இருக்கிறார்கள். டேவிட் வோர்னர், தீபக் ஹூடா ஆகியோர் சன் ரைசர்ஸ் அணியால் எடுக்கப்பட உள்ளனர்.

டோனி, ஜடேஜா, ரெய்னா மீண்டும் சென்னை அணிக்கும் செல்கிறார்கள். கோஹ்லி, சாஹல், டி வில்லியர்ஸ் பெங்களூர் அணிக்கு திரும்புகிறார்கள். ஸ்டிவ் ஸ்மித் ராஜஸ்தான் அணிக்கு திரும்புகிறார். ரோஹித், பாண்டியா மும்பை அணிக்கு செல்கின்றனர்.

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி மட்டும் எந்த வீரரையும் மீண்டும் அணிக்கு திரும்ப எடுக்கவில்லை என்று கூறப்பட்டுள்ளது.

மீதமுள்ள வீரர்கள் எதிர்வரும் 27ஆம் திகதி நடைபெறவுள்ள ஏல பட்டியலில் விலைபோகவுள்ளனர்.  அணிகளின் வரவுசெலவு 80 கோடியாக உயர்த்தப்பட்டு இருக்கிறது. அதிகபட்சமாக வீரர்களுக்கு 15 கோடி வரை இந்த புதிய முறையில் கொடுக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. ஒவ்வொரு வருடமும் அணியின் வரவுசெலவு இரண்டு கோடி ரூபாய் உயர்த்தப்படும்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg