Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

TPP உறுப்புரிமை குறித்து தீர்மானிக்க கால அவகாசம் வேண்டும்: லியம் ஃபொக்ஸ்

In
Published: 07:25 GMT, Jan 4, 2018 |
0 Comments
1124
This post was written by : Risha

டிரான்ஸ் பசுபிக் பங்குடைமை (TPP) வர்த்தக உடன்படிக்கையில் உறுப்புரிமை பெறுவது தொடர்பாக தீர்மானிப்பதற்கு மேலும் காலம் உள்ளது என பிரித்தானிய வர்த்தக அமைச்சர் லியம் ஃபொக்ஸ் தெரிவித்துள்ளார்.

நேற்று (புதன்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், ”நாம் இதுவரை எவ்வித பேச்சுவார்த்தைகளையும் முன்னெடுக்காத நிலையில் டிரான்ஸ் பசுபிக் பங்குடைமை   வர்த்தக உடன்படிக்கையின் வெற்றி தொடர்பாக முழுமையாக இன்னும் தெரியவில்லை.

எனவே இது குறித்து தீர்மானிக்க எமக்கு சிறிது காலஅவகாசம் அவசியம்” என்றார்.

இதேவேளை, சாத்தியமான பிரித்தானிய – சீன சுதந்திர வர்த்தகஉடன்படிக்கை குறித்து கருத்து தெரிவித்த அவர், ”ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவதற்கு முன்பாக இரு நாடுகளுக்கும் இடையிலான பரஸ்பர நலன்கள் குறித்து விவாதிக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg