Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஈரான் நெருக்கடியால் சர்வதேச பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இல்லை – பிரான்ஸ்

In ஐரோப்பா
Published: 08:35 GMT, Jan 6, 2018 |
0 Comments
1140
This post was written by : Suganthini

ஈரானில் காணப்படும் நெருக்கடியான நிலைமை, சர்வதேசத்தின் சமாதான நடவடிக்கைக்கோ அல்லது, பாதுகாப்புக்கோ அச்சுறுத்தலாக இல்லையென, ஐ.நா.வுக்கான பிரான்ஸ் தூதுவர் ஃபிரான்சுவா டெலட்ரே (Francois Delattre ) தெரிவித்துள்ளார்.

ஈரான் விவகாரம் தொடர்பாக, ஐ.நா. பாதுகாப்புச் சபைக் கூட்டத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) விவாதிக்கப்பட்டபோதே, அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்தபோது, ‘ஈரானில் கடந்த சில நாட்களாகவிருந்து அமைதியற்ற சூழ்நிலை காணப்பட்டு வருகின்றது. இருப்பினும், அந்நாட்டில் காணப்படும்  அமைதியற்ற சூழ்நிலை, சர்வதேசத்தின் சமாதான நடவடிக்கைக்கோ அல்லது பாதுகாப்பு நடவடிக்கைக்கோ அச்சுறுத்தலாக அமையவில்லை’ என்றார்.

ஈரானில் ஊழல் நிறைந்த ஆட்சியைக் கண்டித்தும் பொருளாதார ஸ்திரமற்ற நிலைமையைக் கண்டித்தும் அந்நாட்டு மக்கள் கடந்த சில நாட்களாக ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்ட நிலையில், பொலிஸாருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கிடையில் வன்முறை வெடித்தது. ஈரானின் இந்த நிலைமையைக் கவனித்திற்கொண்ட அமெரிக்கா, இது தொடர்பாக நடவடிக்கை எடுப்பதற்கு அவசரமாக ஐ.நா. பாதுகாப்புச் சபைக் கூட்ட வேண்டுமென்று கடந்த வாரம் வலியுறுத்தியிருந்தது. இவ்வாறான சூழ்நிலைக்கு மத்தியில் ஐ.நா.வுக்கான பிரான்ஸ் தூதுவர் மேற்படி கருத்தை வெளியிட்டுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg