Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதல்: 4 பொலிஸாரால் உயிரிழப்பு

In இந்தியா
Published: 08:56 GMT, Jan 6, 2018 |
0 Comments
1125
This post was written by : Varothayan
Four-policemen

ஜம்மு காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டம், சோபூர் நகரின் சந்தைப்பகுதிக்கு அருகே இன்று (சனிக்கிழமை) காலை தீவிரவாதிகள் நடத்திய வெடிகுண்டுத்தாக்குதலில் நான்கு பொலிஸார் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இச்சம்பவத்தில் காயமடைந்த மேலும் இரண்டு பொலிஸார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குண்டு வெடிப்பை தொடர்ந்து அந்த பகுதியில் பொலிஸார் மற்றும் துணை இராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. தூர இருந்து இயக்கும் கருவி (ரிமோட்) மூலமே இத்தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

சோபூர் நகரில் கடந்த 1993 ஆம் ஆண்டு பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 55 பேர் கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்தின் 25 ஆம் ஆண்டு நினைவான இன்று கடையடைப்புக்கு பிரிவினைவாத அமைப்புகள் அழைப்பு விடுத்திருந்தன.

இதனால் அசம்பாவித சம்பங்கள் மற்றும் வன்முறைகளை ஒடுக்குவதற்காக பொலிஸார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். இதன் போதே ரோந்து சென்ற பொலிஸார் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்துக்கு காஷ்மீர் முதலமைச்சர் மெகபூபா முப்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். குண்டு வெடிப்பில் பலியான பொலிஸாரின் குடும்பங்களுக்கு அவர் ஆழ்ந்த இரங்கலை ருவிட்டர் மூலம் தெரிவித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)