Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கமல்ஹாசனுக்கு எதிராக ஆர்.கே.நகரில் ஆர்ப்பாட்டம்

In இந்தியா
Updated: 09:52 GMT, Jan 6, 2018 | Published: 09:52 GMT, Jan 6, 2018 |
0 Comments
1343
This post was written by : Varothayan

நடிகர் கமல்ஹாசனைக் கண்டித்து இன்று (சனிக்கிழமை) ஆர்.கே. நகர் தொகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்தும் தடைப்பட்டுள்ளது.

அண்மையில் இடம்பெற்ற ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் சுயேட்சை வேட்பாளர் டி.டி.வி.தினகரன் வெற்றி பெற்றிருந்தார். இந்த தேர்தல் முடிவுகள் குறித்து வார இதழ் ஒன்றில் கமல் எழுதிய கட்டுரையில், பணம் கொடுத்து வெற்றியை விலைக்கு வாங்கிவிட்டதாக கூறியிருந்தார்.

ஆர்.கே.நகர் தேர்தலில் வாக்களிப்பதற்காக பணம் பெற்றது திருடனிடம் பிச்சை எடுப்பதற்கு சமமானது என்றும் கமல் குறிப்பிட்டிருந்தார்.

அவரது இந்த விமர்சனத்திற்கு டி.டி.வி. ஆதரவாளர்களும், ஆர்.கே.நகர் தொகுதி மக்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இந்நிலையிலேயே, இன்று தண்டையார் பேட்டை திருவொற்றியூர் தெரு, ஏ.இ.கோவில் தெரு சந்திக்கும் பகுதியில் ஐந்நூறுக்கும் மேற்பட்டவர்கள் திரண்டு வந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்கள் நடிகர் கமல்ஹாசனை கண்டித்து கோஷம் எழுப்பினார்கள்.

தங்களை கொச்சைப்படுத்தி பேசிய கமல்ஹாசன் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறினார்கள்.

இதேபோல் தண்டையார்பேட்டை திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் கமல்ஹாசன் ஆர்.கே.நகர் பொது மக்களை இழிவுபடுத்தி பேசியதை கண்டித்து மனித சங்கிலி போராட்டத்திலும் ஈடுபட்டனர். நூற்றுக்கணக் கானவர்கள் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg