Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஊடக சுதந்திரம் கொலை செய்யப்பட்டு இன்றுடன் ஒன்பது வருடங்கள்!

In இலங்கை
Updated: 06:47 GMT, Jan 8, 2018 | Published: 06:10 GMT, Jan 8, 2018 |
0 Comments
1278
This post was written by : Anojkiyan
2.o.jpeg - Copy (2) - Copy

படுகொலைசெய்யப்பட்ட ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்கவின் ஒன்பதாவது நினைவுத் தினம் இன்று (திங்கட்கிழமை) உண்மைகள் அறுவடை செய்ய விரும்புகின்ற தரப்புகளால் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றன.

அவரது நினைவுத் தினத்தை முன்னிட்டு பொரளையில் அமைந்துள்ள அன்னாரது கல்லறையில், பல தரப்புகளாலும் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்றன.

இதன் ஒரு கட்டமாக லசந்த விக்கிரமதுங்வின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அவரது கல்லறையில் பூங்கொத்து வைத்து மெழுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தினர். இதனைதொடர்ந்து அமைச்சர் ரவி கருணாநாயக்க, இலங்கைக்கான அமெரிக்க பிரதித்தூதுவர் ரொபர்ட் ஹில்டன் ஆகியோரும் அஞ்சலி செலுத்தினர்.

கடந்த 2008ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 8ஆம் திகதி அலுவலகத்திற்கு சென்றுகொண்டிருந்த வேளை, சண்டே லீடர் பத்திரிகையின் ஸ்தாபக ஆசிரியர் லசந்த விக்ரமதுங்க சுட்டுக்கொல்லப்பட்டார்.

இக்கொலையுடன் கடந்த ஆட்சியாளர்களே தொடர்புபட்டுள்ளனர் என்று சந்தேகிக்கப்படும் நிலையில், குற்றப்புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், உக்ரைன் நாட்டுடன் மஹிந்த அரசாங்கம் மேற்கொள்ளவிருந்த முறைகேடான ஒப்பந்தம் ஒன்று தொடர்பில் ஊடகவியலாளர் லசந்த அறிந்திருந்ததாகவும் குறித்த ஒப்பந்தம் கைச்சாத்திடுவதற்கு முன்னர் அவர் கொலை செய்யப்பட்டு விட்டதாகவும் அமைச்சர் ராஜித சோனரத்ன நேற்று கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)