Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அவுஸ்ரேலிய அணியின் துணைப் பயிற்சியாளராக ரிக்கி பொண்டிங் நியமனம்

In கிாிக்கட்
Updated: 07:40 GMT, Jan 9, 2018 | Published: 07:40 GMT, Jan 9, 2018 |
0 Comments
1100
This post was written by : Elakkiya
i (1)

இங்கிலாந்து, நியூஸிலாந்து மற்றும் அவுஸ்ரேலிய அணிகளுக்கு இடையில் நடைபெறவுள்ள முத்தரப்பு ரி-ருவென்ரி போட்டித் தொடரில் அவுஸ்ரேலிய அணியின் துணைப் பயிற்சியாளராக முன்னாள் அணித்தலைவர் ரிக்கி பொண்டிங் செயற்படவுள்ளார்.

அணியின் தலைமைப் பயிற்சியாளர் டரன் லேமனுடன் இணைந்து இவர் பணியாற்றவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதற்கு முன்னதாக கடந்த 2017 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் இலங்கை அணியுடன் நடைபெற்ற ரி-ருவென்ரி தொடரிலும் ஜஸ்டின் லாங்கர் மற்றும் ஜேசன் கிலெப்ஸி உடன் இணைந்து பொண்டிங்கும் பயிற்சியாளராக பணியாற்றியிருந்தார்.

அதுதவிர இவ்வாண்டு நடைபெறவுள்ள ஐ.பி.எல். தொடருக்கான டெல்லி டேர்டெவில்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளராக ரிக்கி பொண்டிங் கடந்த வாரம் நியமிக்கப்பட்டார். இதற்கு முன்னதாக கடந்த 2015 ஆம் ஆண்டு மும்பை இந்தியன்ஸ் அணியின் பயிற்சியாளராகவும் செயற்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது .

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)