Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

நேற்று… இன்றும் இனித்தது!

In
Updated: 09:48 GMT, Jan 10, 2018 | Published: 06:56 GMT, Jan 10, 2018 |
0 Comments
1077
This post was written by : srikkanth

வானை முட்டி முகில்களைத் தொட்டுவிடும் வீறாப்பில் நிமிர்ந்து நிற்கிறது நட்சத்திர விடுதி. கணினிக்குள் முகம் புதைத்து பகலெல்லாம் தொலைத்த புத்துணர்விற்காய் குவளை ஏந்திய கரங்களோடு உச்சியிலே கபிலன்!

உருண்டு திரண்டு வளைவுகளால் ஜாலம் காட்டி கரையோடு ஊடல் கொள்ளும் அலைகளும் அவை சுமந்துவரும் பதமான தென்றலும் கபிலனை இதமாக வருடுகின்றன!

கபிலன் சிரித்தான். வாய்விட்டுச் சிரித்தான். தூரத்தில் நின்று யாராவது பார்த்திருந்தால் பைத்தியம் என்று தீர்மானம் பண்ணியிருப்பார்கள். ஆனால் யாரும் அருகில் இல்லை.

கபிலன் நேற்று இதேநேரம் அவன் கண்களில் படுகின்ற கடற்கரையில்த்தான் அகல்யாவுடன் காதல் வளர்த்துக் கொண்டிருந்தான். அதை நினைத்தான். நினைத்தபோது மனம் மகிழ்ச்சியால் நிரம்பக் கண்டான்.

“அகல்யா உனக்கொரு விசயம் தெரியுமோ..?”

“என்ன விசயம்?” அமுதைப் பொழியும் குரலில் அகல்யா வினா தொடுத்தாள்.

அம்பிருந்தால் எடுத்துத் தொடுத்துவிடலாம் என்று எண்ண வைக்கும் அகல்யாவின் விற்புருவங்கள், வினா தொடுக்கையில் உயர்ந்து வளைந்த அழகைக் கபிலன் ரசித்தான். மனதால் படம் எடுத்து பத்திரப்படுத்திக் கொண்டான்.

“பெண்களின் இடை இருக்கிறதே இடை”

sunset123

“என்ன..?”

“சொல்லி முடிக்க முன்னரே அவசரவப்பட்டால் எப்படி?”

ஏதோ விஷமமாய்த்தான் சொல்வான் என்பது அகல்யாவிற்குத் தெரியும். அதை அறிய மனசு துடித்தது. உதட்டில் பொய்க் கோபம் அரும்பியது.

“விஷமம் இல்லாத விசயம் என்றால் சொல்லுங்கள்”

“விஷமம் உள்ளே விசயம் என்றால் என்ன செய்வது?”

“நீங்கள் தனித்திருந்து பேசிக் கொண்டிருக்கலாம். நான் ஹொஸ்டலுக்கு சென்று விடுவேன்”

“சென்றுவிடுவேன்.. சென்றுவிடுவேன்… வந்தவுடனேயே இந்த வார்த்தையுடன்தான் பேச ஆரம்பிக்கின்றாய். இதைச் சொல்லியே மனதை கெடுத்து விடுகிறாய்” கபிலன் சலித்துக் கொண்டான்.

நாளிகை தவறினால் வார்டன் எகிறுவாரே என்ற தவிப்போடு வானத்தை அண்ணாந்து நேரத்தை நோட்டம் விட்டாள்.

கபிலன் புரிந்துகொண்டான். “என்ன பார்க்கிறாய்?”

உண்மையை சொன்னால் கோபிப்பான் என்பது அகல்யாவிற்குத் தெரியும். பொய் சொன்னாள்.

“பரந்து விரிந்த வானத்தில் உங்களுடன் பறந்து திரிந்தால் எப்படி இருக்கும் என்று யோசித்தேன்”

“பறக்க வேண்டும் என்று விரும்புகின்றாய் அகல்யா, ஆனால் என்னுடைய சிறகுகளை மட்டும் அடிக்கடி வெட்டிப் போடுகிறாய்”

“நான் வெட்டிப் போடுகிறேனா?” விழிகளினால் கணை தொடுத்தாள்.

“முதலீட்டாளர்களின் கைகளிலே வசமாக மாட்டிக்கொண்டோம். திரட்டிய அறிவை சாறாயப் பிழிந்து செல்வம் சுவைக்கிறார்கள். வாழ்வை பறிக்கிறார்கள். வாங்கும் நாணயத்திற்கு நியாயமாய் இருக்க எண்ணி காலத்தைத் தொலைத்துக் கொண்டிருக்கின்றோம். இதனை எண்ணும்போது ஏற்படும் விரக்தி – ஏமாற்றம் எல்லாம் நீ அருகில் இருக்கும்போது பறந்து விடுகிறது அகல்யா. ஆனால் நீயோ.. வந்ததும் போகிறேன் போகிறேன் என்கிறாய்”

நீளமாயப் பேசினான் கபிலன் – கனதியாய்ப் பேசினான்.

கபிலனின் இதய சோகம் புரிந்தது. பேச்சின் திசை மாற்ற நினைத்தாள்.

“இடையோ.. கடையோ.. என்று ஏதோ சொன்னீர்கள்..?”

கபிலனின் இதயசோகம் இறங்கி மீணடும் இலவம் பஞ்சுபோல் இதயம் மாறியது – கேலிப் பேச்சுக்குத் தயாரானது.

“பெண்களின் இடையில் ஒரு நரம்பு இருக்கிறதாம்;. ஆதைத் தொட்டுப் பார்த்தால் காதல் தோல்வியில் முறிவடையுமா அல்லது வெற்றிக் களிப்பில் தொடருமா என்பதை கண்டறிய முடியுமாம்”

“அப்படியேதும் நரம்பு இருப்பதாயத் தெரியவில்லையே.. எமக்கே தெரியாமல் எமது இடையில் காதல் ஜோசியம் சொல்லும் புது நரம்பா..,,? யார் சொன்னது?”

“போடி பைத்தியக்காரி, இதெல்லாம் பெண்களுக்குத் தெரியாது. ஆண்களுக்கு மட்டும் தெரிந்த ரகசியம். ஆண்கள் விரல் தொட்டு சுதி மீட்கும்போதே பெண்களுக்குள் இருக்கும் பல விசயங்கள் அவர்களுக்கே புரிகின்றது. அதில் இதுவும் ஒன்று. காதல்க் கலையில் கரை கண்ட யோகி ஒருவர் இதனை கூறினார்”

“அதற்கென்ன இப்போ..?”

“அப்படிக்கேள், நமது காதலின் முடிவறிய ஆவல். அதற்கான அனுமதி வேண்டும்” கபிலன் அப்பாவிபோல் முகத்தை வைத்துக்கொண்டு கொக்கி போட்டான்.

அகல்யாவிற்கும் அரவணைப்பில் ஆர்வம் இருந்தது. கபிலனின் விரல்கள் இடைமீது நடை பயிலும் உணர்வை அறிந்துகொள்ள மனது விரும்பியது. ஆனால் வெட்கம் தடுக்க உதட்டில் பொய்க் கோபம் காட்டினாள்.

“ஆளைப்பார், அதெல்லாம் இப்ப ஏலாது. உந்த ஆராய்ச்சிக்கெல்லாம் அனுமதி அளிக்க முடியாது”

“ஏன் வேண்டாம்”

ஆனால், இப்போது கபிலன் அனுமதிக்காக காத்திருக்கவில்லை. காதல் தந்த உரிமையோடு ஆசை விதைத்த ஆவேசத்தோடு அழுத்தமாய் இடையிலே இடம் பிடித்தான்.

அகல்யா தடுப்பது போல் நடித்தாள். கையை விலக்குவது போல் பாசாங்கு செய்து அழுத்தமாய் கை படியும் படி பார்த்துக்கொண்டாள்.

“என்ன இன்னும் ஆராய்ச்சி முடியவில்லையா..?”

“இல்லை இன்னுமொரு ஆராய்ச்சி மீதமிருக்கிறது”

“அது என்ன ஆராய்ச்சி..”

“நரம்பை கண்டுபிடித்து விட்டேன். நரம்பு மேல்நோக்கி நகர்கிறது. முடிவை கண்டறிய வேண்டும் கொஞ்சம் பொறு அகல்யா”

வளைவுகளை கடந்து நகர்ந்த நிலையில் திரட்சியில் தொடர்கிறது நரம்புக்கான தேடல்.

”போதும் ஆராய்ச்சி.. ஆளைப்பார்…! யோகி சொன்னாராம்…”

விரல்களை மடக்கி சக்தியை திரட்டி விழிகளில் சின்னக் கோபம் காட்டி கபிலனின் மார்பினில் ஓங்கிக் குத்தினாள். புள்ளி மானாய் துள்ளி எழுந்து சிதறிக்கிடந்த உடைமைகளை வாரிச் சுருட்டிப் பாய்ந்து ஓடினாள் ஹாஸ்டலை நோக்கி..

நேற்று நடந்தது இந்த சரசம். இன்று நினைக்கையிலும் கபிலனுக்கு மனம் துள்ளி விளையாடுகிறது.

குவளையில் ஊற்றிய மதுவைக் காட்டடிலும் அகல்யா எனும் மாதுவினால் ஊறிய புத்துணர்வை பன்மடங்காய் கபிலன் உணர்ந்தான்.

இதைத்தான் வள்ளுவர் சொல்கிறார்.

‘உள்ளக் களித்தலும் காண மகிழ்தலும் 
கள்ளுக்கில் காமத்திற்கு உண்டு’

அதிகாரம்-129
குறள்- 1281

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg