Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை: கூட்டு எதிரணி கையொப்பம்!

In இலங்கை
Updated: 16:38 GMT, Jan 10, 2018 | Published: 16:38 GMT, Jan 10, 2018 |
0 Comments
1145
This post was written by : Vithushagan

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையொன்றில் கூட்டு எதிர்க் கட்சி உறுப்பினர்கள் இன்று (புதன்கிழமை) கையொப்பமிட்டுள்ளனர்.

கூட்டு எதிர்க் கட்சி உறுப்பினர்கள் இன்று  நாடாளுமன்றத்தில்  கூடிய போது இந்த கையொப்பமிடும் நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.

மத்திய வங்கி முறி மோசடி தொடர்பிலான ஜனாதிபதி விசாரணை அறிக்கையை வைத்து பிரதமருக்கு எதிராக இந்த பிரேரணை தயார்படுத்தப்பட்டுள்ளது. அடுத்துவரும் நாட்களில் மேலும் சில பாராளுமன்ற உறுப்பினர்கள் இதில் கையொப்பமிடவுள்ளதாக கூட்டு எதிர்க் கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை ஊடாக மத்திய வங்கி முறி மோசடிக்கு ஆதரவானவர்கள் யார்? எதிரானவர்கள் யார்? என்பதை மக்கள் பகிரங்கமாக அறிந்துகொள்ளலாம் என நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன  இன்று ஊடகவியலாளர் சந்திப்பில் குறிப்பிட்டிருந்தார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg