Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கிளிநொச்சி மாவட்ட வேட்பாளர்களைத் தெளிவூட்டும் செயலமர்வு!

In இலங்கை
Updated: 09:53 GMT, Jan 13, 2018 | Published: 09:53 GMT, Jan 13, 2018 |
0 Comments
1167
This post was written by : Ravivarman

கஃபே அமைப்பினால் கிளிநொச்சி மாவட்ட வேட்பாளர்களை தெளிவூட்டும் செயலமர்வு இன்று (சனிக்கிழமை) கிளிநொச்சி சோலைவனம் விடுதியில் இடம்பெற்றது.

கஃபே அமைப்பின் பொறுப்பதிகாரி கீர்த்தி தென்னகோன் தலைமையில் இன்று காலை 9 மணியளவில் ஆரம்பமான குறித்த நிகழ்வில் கிளிநொச்சி மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்கள் கலந்து கொண்டனர்.

அதனைத் தொடர்ந்து கீர்த்தி தென்னகோன் அவர்களின் ஊடக சந்திப்பும் இடம்பெற்றது. இச்சந்திப்பில் கடந்த காலங்களில் இடம்பெற்ற அச்சுறுத்தலான தேர்தல் போல் அல்லாது, அமைதியான முறை காணப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.

தென்னிலங்கையில் அதிகளவில் சுவரொட்டிகள், அலங்காரங்கள் காணப்படுகின்ற போதிலும், வடக்கில் மிக மிகக் குறைவாகவே காணப்படுவதாகவும், வேட்பாளர்கள் வீடுகளிற்கு சென்று மக்களுடன் கலந்துரையாடித் தேர்தலில் போட்டியிடுவதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

caffe

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg