Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தொண்டர்களைச் சந்தித்தார் கருணாநிதி!

In இந்தியா
Updated: 07:39 GMT, Jan 14, 2018 | Published: 07:39 GMT, Jan 14, 2018 |
0 Comments
1085
This post was written by : Arul Jesu

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தி.மு.க தலைவர் கருணாநிதி இன்று (ஞாயிற்றுக்கிழமை) கோபாலபுரம் இல்லத்தில் தொண்டர்களைச் சந்தித்தார்.

ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையன்று தொண்டர்களைச் சந்திப்பது வழமை. ஆனால் சென்ற ஆண்டு உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவர்கள் அனுமதிக்காததால் சந்திப்பு இடம்பெறவில்லை.

இம்முறை மருத்துவர்களின் ஆலோசனைக்கமைய தொண்டர்களைச் சந்திப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில் இன்று காலையிலேயே ஆயிரக்கணக்கான தொண்டர்கள் கருணாநிதியின் இல்லத்தில் கூடியிருந்தனர். இந்தச் சந்திப்பின் போது கருணாநிதியுடன் டி.ஆர்.பாலு, கனிமொழி ஆகியோர் உடனிருந்தனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg