Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மஹிந்தவை விட கொள்ளையடித்தவர் நாட்டில் எவரும் இல்லை: இராதாகிருஸ்ணன்

In இலங்கை
Updated: 14:10 GMT, Jan 20, 2018 | Published: 14:10 GMT, Jan 20, 2018 |
0 Comments
1282
This post was written by : Varothayan

கடந்த அரசாங்கத்தின் போது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபாக்ஷவை விட எமது நாட்டில் கொள்ளையடித்தவர் எவரும் இல்லையென கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஸ்னண் தெரிவித்தார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் உள்ளுராட்சி சபைத்தேர்தலில் போட்டியிடும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் வேட்பாளர்களுடைய தேர்தல் பிரசாரகூட்டம் பொகவந்தலாவ கெர்க்கஸ்வோல்ட் கீழ் பிரிவு தோட்டத்தில் இடம்பெற்றபோதே அவர் இதனை தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்து பேசிய கல்வி இராஜாங்க அமைச்சர், நாட்டில் இன்று நல்லாட்சி பிறந்திருக்கிறது. இந்த நல்லாட்சியின் முலமாக பல்வேறு அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுத்துவரும் ஐ.தே.க.வின் தலைவரும் எமது பிரதம மந்திரியுமான ரணில் விக்கரமசிங்கவை கொள்ளைக்காரர்கள் என கூறுகிறார்கள். ஆனால் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எமது மக்களை இல்லாமலே ஆக்கியிருக்கிறார் எனவும் தெரிவித்தார்.

இன்று ஐ.தே.க.வின் ஊடாக பல்வேறு அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. இது போன்ற அபிவிருத்தி திட்டங்களை கருத்தில் கொண்டு இந்த உள்ளுராட்சி சபைத் தேர்தலில் ஐ.தே.க.வுக்கு வாக்களித்து பிரதமரை மேலும் பலபடுத்த வேண்டுமென கேட்டுகொண்டார்.

ஐக்கிய தேசிய கட்சி தான் கடந்த 1989 ஆம் ஆண்டு எமக்கு பிரஜாவுரிமையைப் பெற்றுகொடுத்தது. அதன் காரணமாகத்தான் இன்று வாக்கு கேட்பதற்கு எமது மக்களை தேடிவருகின்றனர். இல்லவிட்டால் எமது மக்களை எவரும் மதிக்கமாட்டார்கள். ஆகவே தான் எமக்கு வாக்குரிமை வழங்கிய ஐக்கிய தேசிய கட்சிக்கு வாக்களிக்க வேண்டும் எனவும் கல்வி இராஜாங்க அமைச்சர் அங்கு மேலும் பேசினார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg