Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

‘பத்மாவத்’ திரைப்படத்தை திரையிட தடை இல்லை! உச்ச நீதிமன்றம் மீண்டும் அறிவிப்பு

In இந்தியா
Updated: 11:07 GMT, Jan 23, 2018 | Published: 10:28 GMT, Jan 23, 2018 |
0 Comments
1142
This post was written by : Kemasiya

பத்மாவத் திரைப்படத்திற்கு தடை விதிக்க கூடாது என உச்ச நீதிமன்றம் மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

தனிக்கைகுழு ‘யுஏ’ சான்றிதழ் வழங்கியுள்ளபோதும், சிலமாநிலங்களில் பத்மாவத் படத்திற்கு தடை விதிக்கப்படுவதாக சுட்டிக்காட்டி தாக்கல் செய்யப்பட்ட மனு, நேற்று (திங்கட்கிழமை) உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதன்போது,  “ஏற்கனவே கூறியதை போன்று பத்மாவத் திரைப்படத்டைத திரையிட தடை விதிக்க கூடாது ” என உச்ச நீதிமன்றம் மீண்டும் உத்தரவிட்டுள்ளது.

தீபிகா படுகோன் நடித்துள்ள, ராஜபுத்திர வம்சத்தினரின் வரலாற்றுக்கதையை தழுவிய “பத்மாவதி” திரைப்படத்திற்கு இந்துமத அமைப்புக்கள் உட்பட பலரும் எதிர்பினை வெளியிட்டிருந்தனர்.

இதனால் ராஜஸ்தான் மற்றும் குஜராத் உள்ளிட்ட சிலமாநிலங்களில் குறித்த படம் திரையிடுவதற்கு தடை விதிக்கப்பட்டது.

ஆனால் இந்த தடையை நீக்கக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், தொடர் விசாரணையை அடுத்து படத்தின் பெயரை மாற்றியமைக்க உத்தரிவிட்டது.

இதனையடுத்து ‘பத்மாவதி’ என்ற பெயர் ‘பத்மாவத்’ எனப் பெயர் மாற்றப்பட்டது. இத்திரைப்படத்திற்கு தணிக்கைச் சான்றிதழும் வழங்கப்பட்ட பின்னர் இதனை திரையிட அனுமதி வழங்கப்பட்டது.

ஆனால் குறித்த படத்தை திரையிட மீண்டும் எதிர்ப்புக்கள் எழுந்த நிலையில், உச்சநீதிமன்றம் மீண்டும் குறித்த படத்திற்கு தடை விதிக்க கூடாது என்ற உத்தரவை பிறப்பித்துள்ளது.

இந்நிலையில் எதிர்வரும் ஜனவரி 25ஆம் திகதி பத்மாவதி அனைத்து இடங்களிலும் திரையிடப்படம் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் இத்திரைப்படம் எந்த தடங்கலும் இன்றி வெற்றிகரமாக ஓடவேண்டும் என, நடிகை தீபிகா படுகோன் இன்று மும்பை சித்திவிநாயகர் ஆலயத்திற்கு சென்று தரிசனம் செய்துள்ளதைாக ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg