Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பொதுஜன பெரமுனவின் பெண் வேட்பாளர் மீது தாக்குதல்!

In இலங்கை
Updated: 06:27 GMT, Feb 7, 2018 | Published: 06:27 GMT, Feb 7, 2018 |
0 Comments
1052
This post was written by : Puvanes

உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் ஏறாவூர் நகர சபைக்காக போட்டியிடும் பொதுஜன பெரமுன கட்சியின் பொதுப் பட்டியல் வேட்பாளரான பெண் ஒருவரும், அவருடைய ஆதரவாளர்களான மேலும் இரு பெண்களும் தாக்குதலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற குறித்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்கள் ஏறாவூர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த சம்பம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

ஏறாவூர் ஜூப்ரியா வட்டாரத்தில் போட்டியிடும் பெண் வேட்பாளர் ஒருவர் ஆதரவாளர்கள் சகிதம் பிரசார நடவடிக்கைகளுக்காக வீடு வீடாக சென்ற  போது ஆண் ஒருவர் தர்க்கத்தில் ஈடுபட்டுள்ளார்.

அதனைத் தொடர்ந்து குறித்த நபர் பிரசாரத்தில் ஈடுபட்ட பெண்கள் மீது தாக்குதலை மேற்கொண்டுள்ளதாகவும், பாதிக்கப்பட்ட பெண்கள் தற்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

அதனைத் தொடர்ந்து குறித்த சம்பவம் தேர்தல் வன்முறை சம்பவமாக ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டு மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg