Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தென் ஆபிரிக்க வீரர் கிப்ஸ் மற்றும் அஸ்வினுக்கு இடையில் டுவிட்டரில் மோதல்

In கிாிக்கட்
Updated: 09:44 GMT, Feb 20, 2018 | Published: 09:42 GMT, Feb 20, 2018 |
0 Comments
1219
This post was written by : Elakkiya

இந்திய சுழல்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் தென் ஆபிரிக்க துடுப்பாட்ட வீரர் ஹெர்ஷெல் கிப்ஸ் ஆகியோருக்கு இடையில் டுவிட்டரில் மோதல் ஏற்பட்டுள்ளது.

தனது டுவிட்டரில்  காலணி ஒன்றின் விளம்பர வீடியோவை பதிவிட்ட அஸ்வின் அதன் கீழ், ‘நைக்கின் புதிய விளைவு தற்போது எனது கைகளில். இது அதிர்ச்சியளிக்கும் வகையிலான வடிவமைப்புடன் பயன்படுத்தப்படும் தொழில்நுட்பத்தை கொண்டுள்ளது சிறந்த காலணி’ என்று கருத்து பதிவிட்டிருந்தார்.

இதற்கு ‘இந்த காலணியை அணிந்த பின்னராவது நீங்கள் வேகமாக ஓடுவீர்கள் என்று நம்புகின்றேன்’ என தென் ஆபிரிக்க வீரர் ஹெர்ஷெல் கிப்ஸ் பதில் கருத்திட்டார்.

2017 ஆம் ஆண்டின் பின்னர் இந்திய அணியில் பெருமளவில் இடம்பிடிக்காத அஸ்வின், ஹெர்ஷெல் கிப்ஸின் மேற்படி கருத்தினால் உணர்சிவசப்பட்டு ‘ உங்களைப் போன்று நான் வேகமாக ஓடவில்லை நண்பரே. துரதிஷ்டவசமாக உங்களைப் போன்று ஆசீர்வதிக்கப்படவில்லை. ஆனால் கிரிக்கட் சூதாட்டத்தில் ஈடுபடாமல் உழைத்து உண்ணும் நன்நெறி கொண்ட மனதால் ஆசீர்வதிக்கப்பட்டுள்ளேன்’ என்று பதிலடி கொடுத்துள்ளார்.

இந்த விவகாரம் இரசிகர்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்படும் விடயமாக மாறியுள்ளது.

இந்திய வீரர்களான அஸ்வின் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் 2017 ஆம் ஆண்டின் பின்னர் அணியில் இடம்பெறுவது குறைவு என்றே கூறமுடியும்.

இவர்களுக்கு பதிலாக இளம் வீரர்கள் சஹால் மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோர் அணியில் இடம்பிடித்துள்ளனர். அஸ்வின் மற்றும் ஜடேஜா ஆகியோர் குறகிய வடிவங்களில் மீண்டும் இடம்பிடிப்பரா என்பது சர்ச்சைக்குரிய பிரச்சினையாக மாறியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg