Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

குளிரால் பலவீனமானவர்கள் பாதிக்கும் அபாயம்: சுகாதார ஸ்தாபனம் எச்சரிக்கை

In
Updated: 09:32 GMT, Mar 3, 2018 | Published: 09:30 GMT, Mar 3, 2018 |
0 Comments
1155
This post was written by : Suganthini

ஐரோப்பாவில் நிலவும் சீரற்ற காலநிலையால் வயோதிபர்கள், சிறுவர்கள், கடும் நோயாளர்கள் இலகுவில் பாதிக்கப்படக்கூடியவர்களாக இருப்பதாக, உலக சுகாதார ஸ்தாபனம் எச்சரித்துள்ளது.

ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் கடந்த வாரம் முதல் நிலவும் கடும் குளிரான காலநிலை காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 60ஆக உயர்ந்துள்ளது.

போலாந்தில் 23 பேரும் சிலோவாக்கியாவில் 7 பேரும் செக் குடியரசு, லித்துனியா மற்றும் பிரான்ஸில் 6 பேரும் சீரற்ற காலநிலை காரணமாக உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து ஸ்பெய்ன், இத்தாலி, ரோமெனியா, சைபீரியா பிரித்தானியா, நெதர்லாந்து, சுவீடன், நோர்வே ஆகிய நாடுகளில் குளிரான காலநிலையால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை நேற்று (வெள்ளிக்கிழமை) பதிவாகியுள்ளது.  இந்நிலையில், குளிரான காலநிலையால் இதுவரையில் 60 பேர் உயிரிழந்துள்ளதாகவும், அதிகாரிகள் கூறியுள்ளனர்.

மேலும் ஸ்கொட்லாந்து, சுவிட்ஸர்லாந்து, பிரான்ஸ், அயர்லாந்து ஆகிய நாடுகளில் விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg