Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மும்பை தாக்குதலுடன் தொடர்புடைய தீவிரவாதியை கைது செய்வதற்கு தடையுத்தரவு

In இந்தியா
Updated: 08:30 GMT, Mar 8, 2018 | Published: 08:30 GMT, Mar 8, 2018 |
0 Comments
1123
This post was written by : Kemasiya

மும்பை தாக்குதலுடன் தொடர்புடைய பாகிஸ்தான் தீவிரவாதி ஹபீஸ் சயீதை கைது செய்வதற்கு நீதிமன்றம் தடையுத்தரவு பிறப்பித்துள்ளது.

கடந்த 2008ஆம் ஆண்டு இடம்பெற்ற மும்பை குண்டுத் தாக்குதலுடன் தொடர்புடைய தீவரவாதி மீதான வழக்கு, நேற்று (புதன்கிழமை) லாகூர் உயர்நீதிமன்றில் விசாரணைக்கு வந்த போதே மேற்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்தியா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் கொடுத்த அழுத்தத்தின் காரணமாக, குறித்த தீவிரவாதியை கைது செய்வதற்கு பாகிஸ்தான் அரசு நடவடிக்கை எடுத்திருந்தது.

இந்நிலையில் கடந்த ஜனவரி மாதம் தன்னை கைது செய்யக்கூடாது எனக்கோரி, ஹபீஸ் லாகூர் உயர்நீதிமன்றில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

குறித்த மனு நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே நீதிமன்றம் மேற்படி உத்தரவை பிறப்பித்துள்ளது.

மேலும் ஏப்ரல் மாதம் 4ஆம் திகதிக்குள் பாகிஸ்தான் மற்றும் இந்திய அரசுகள் தங்கள் பதிலை முன்வைக்க வேண்டும் எனவும் நிதிபதி அமீனுதீன் உத்தரவிட்டுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg