Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

‘என் சிந்தனை வளர்ந்த வீடு இது’ : கமல்ஹாசனின் நினைவுக்குறிப்பு!

In இந்தியா
Updated: 07:42 GMT, Mar 11, 2018 | Published: 06:40 GMT, Mar 11, 2018 |
0 Comments
1078
This post was written by : Ravivarman

நடிகர் கமல்ஹாசன் பெரியார் வாழ்ந்த இல்லத்திற்கு சென்று, ‘என் சிந்தனை வளர்ந்த வீடு இது’ என வருகையாளர் குறிப்பேட்டில் பதிவு செய்துள்ளார்.

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் ஈரோட்டில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை பெரியார் வாழ்ந்த இல்லத்திற்கு சென்ற அவர், ‘என் சிந்தனை வளர்ந்த வீடு இது, அவர் சிந்தனை இங்கே வளர்ந்த காரணத்தினால் – அன்புடன் கமல்ஹாசன்’ என வருகையாளர் பதிவேட்டில் குறிப்பு எழுதியுள்ளார்.

அதன்பின்னர் ஊடகவியலாளர்களுக்குக் கருத்துத் தெரிவித்த கமல்ஹாசன், ‘காவிரி விவகாரத்தில் தமிழக எம்.பி.க்கள் இராஜினாமா செய்யவேண்டும் என ஸ்டாலின் கூறியது ஏற்புக்குரியது. ராஜிவ் காந்தி கொலையில் சிறையில் உள்ளவர்களை மன்னித்துவிட்டதாக ராகுல் கூறியது மனிதநேயம் மிக்கது. அதில் தண்டனை பெற்ற 7 பேரை நாம் விடுவிக்க வேண்டும் என கேட்பது சட்டத்தின் தளர்வு.

அத்துடன், அரசியலில் வளர்ச்சி பெறுவதற்குச் சினிமா புகழ் மட்டும் போதாது. அரசியலில் மிக நீண்ட தூரம் செல்லவேண்டும். கிறிஸ்தவ மிஷனரிகள் எனக்கு நிதியுதவி செய்வதாக மற்றவர்கள் கூறுவது நகைப்புக்குரியது. தான்தோன்றித்தனமாக கேட்பவர்களுக்கு பதில் கூற முடியாது” என அவர் மேலும் குறிப்பிட்டார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg